- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வெ.இண்டீசை தோற்கடித்த இந்தியா நிகழ்த்திய மொத்த சாதனைகளின் பட்டியல் – இவ்வளவு சாதனைகளா?

நியூஸிலாந்தில் கடந்த மார்ச் 4ஆம் தேதி கோலகமாக துவங்கிய ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்று வரும் லீக் சுற்றுப் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த உலக கோப்பையில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றியை ருசித்தது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த 2-வது லீக் போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாப தோல்வி அடைந்தது.

வெஸ்ட்இண்டீஸ் துவைத்த இந்தியா:
இதை தொடர்ந்து இந்த உலக கோப்பையில் தனது 3-வது லீக் போட்டியில் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு வலுவான வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா எதிர் கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியாவிற்கு தொடக்க வீராங்கனை யஸ்டிகா பாட்டியா அதிரடியாக பேட்டிங் செய்து 31 (21) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த கேப்டன் மிதாலி ராஜ் 5 (11), தீப்தி சர்மா 15 (21) என சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் 78/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே தடுமாறியது.

- Advertisement -

அந்த இக்கட்டான நேரத்தில் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி சேர்ந்து வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை சரமாரியாக அடிக்க தொடங்கினர். ஆரம்பத்தில் மெதுவாக தொடங்கிய இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல பவுண்டரி மழையைப் பொழிந்தது என்றே கூறலாம். ஏனெனில் 4வது விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்து இந்தியாவை மீட்டெடுத்தது.

இந்த ஜோடியில் நீண்ட நாட்கள் கழித்து பார்முக்கு திரும்பிய ஹர்மன்பிரீட் கௌர் 107 பந்துகளில் சதமடித்து 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் அபாரமாக பேட்டிங் செய்த ஸ்மிருதி மந்தனா 119 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 123 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் 50 ஓவர்களில் 317/8 என்ற மிகப் பெரிய ஸ்கோரை இந்தியா பதிவு செய்தது.

- Advertisement -

இந்தியா மாஸ் வெற்றி:
இதை அடுத்து 318 என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீராங்கனைகள் டோட்டின் 62 (46) ரன்களும் மேத்யூஸ் 43 (36) ரன்கள் எடுத்து அபார தொடக்கம் கொடுத்தனர். குறிப்பாக முதல் விக்கெட்டுக்கு 100/0 ரன்கள் குவித்த இந்த ஜோடி இந்தியாவிற்கு அச்சுறுத்தலை கொடுத்தது. ஆனால் அந்த நேரத்தில் சுதாரித்த இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அடுத்து வந்த வீராங்கனைகள் இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் 100/0 என தொடங்கிய அந்த அணி வெறும் 162 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக தோல்வி அடைந்தது. இதன் காரணமாக 155 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியது.

- Advertisement -

சாதனை மேல் சாதனை:
இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்திய இந்தியாவும் இந்திய வீராங்கனைகளும் நிறைய சாதனைகளை படைத்தனர் அதை பற்றி பார்ப்போம்.

1. முதலில் இப்போட்டியில் இந்தியாவிற்காக கேப்டன்ஷிப் செய்த மிதாலி ராஜ் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட வீராங்கனை என்ற புதிய உலக சாதனை படைத்தார். இன்றைய போட்டியுடன் 24 உலக கோப்பை போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ள அவர் இவர் ஆஸ்திரேலிய முன்னாள் வீராங்கனை பெலிண்டா கிளார்க்கை முந்தி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

2. இந்த போட்டியில் 317 ரன்கள் எடுத்த இந்திய அணி மகளிர் உலககோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக 300 ரன்களை தொட்டது. இதன் வாயிலாக மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து இந்தியா புதிய சரித்திரம் படைத்தது. மகளிர் உலகக் கோப்பைகளில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் இதோ:
317/8*, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, 2022.
284/6, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, 2013.

3. இந்த போட்டியில் 4வது விக்கெட்டுக்கு 184 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மந்தனா மற்றும் ஹர்மன்பிரீட் ஆகியோர் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த இந்திய ஜோடி என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தது. மகளிர் உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த இந்திய ஜோடிகளின் பட்டியல் இதோ:
1. ஸ்மிரிதி மந்தனா – ஹர்மன்ப்ரீட் கௌர் : 184 ரன்கள், 2022*.
2. பூனம் ரௌட் – காமினி : 175 ரன்கள், 2013.
3. மித்தாலி ராஜ் – பூனம் ரௌட் : 157 ரன்கள், 2017.

4. இந்த போட்டியில் சதமடித்த இந்தியாவின் துணை கேப்டன் ஹர்மன்பிரீட் கவூர் மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனை படைத்தார். இவர் இதுவரை 3 சதங்கள் அடித்து இந்த அபார சாதனை படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஸ்மிருதி மந்தனா மற்றும் மிதாலி ராஜ் ஆகியோர் தலா 2 சதங்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளனர்.

5. இந்த போட்டியில் சதமடித்த ஸ்மிருதி மந்தனா உலக கோப்பையில் தனது 2-வது சதத்தை பதிவு செய்தார். இவர் ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு இதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது முதல் உலக கோப்பை சதத்தை எடுத்திருந்தார் என்பது ஆச்சரியப்படும் அம்சமாகும்.

6. இந்த போட்டியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்பிரீத் ஆகியோர் ஜோடியாக சதம் அடித்தனர். மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இது போல ஒரே போட்டியில் 2 இந்திய வீராங்கனைகள் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.

7. இந்த போட்டியில் 1 விக்கெட் எடுத்த இந்தியாவின் அனுபவ வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீராங்கனை என்ற புதிய உலக சாதனை படைத்தார். மகளிர் உலகக் கோப்பைகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீராங்கனைகள் இதோ:
1. ஜூலன் கோஸ்வாமி (இந்தியா) : 40* விக்கெட்கள்.
2. லின் பியூல்ஸ்டன் (ஆஸ்திரேலியா) : 39 விக்கெட்கள்.

- Advertisement -