- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வங்கதேச தொடருக்கான டி20 இந்திய அணி அறிவிப்பு. கோலி ஓய்வு. தோனிக்கு வாய்ப்பு மறுப்பு – விவரம் இதோ

வங்கதேச அணி நவம்பர் மாதம் துவக்கத்தில் இந்தியா வந்து 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்த தொடருக்கான டி20 அணி நேற்று தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தலைமையில் அறிவிக்கப்பட்டது.

இதில் தொடர்ச்சியாக விளையாடி வரும் இந்த அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் விளையாடாமல் இருந்த தோனிக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் டி20 அணியில் கீப்பராக தொடர்கிறார் இதோ டி20 அணி வருமாறு ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், க்ருனால் பாண்டியா, சாஹல், தீபக் சஹர், ராகுல் சாகர், கலீல் அஹ்மத், ஷிவம் துபே மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளார்கள்.

இந்த அணியை நேற்று நடந்த தேர்வுக்குழு கூட்டத்திற்கு பிறகு பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக அறிவித்தது. முதல் டி20 போட்டி நவம்பர் 3 ஆம் தேதி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by