நியூசிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அதிகாரபூர்வ அறிவிப்பு – விவரம் இதோ

Ind-1
- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற டி20 தொடரில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று அபாரமாக சாதனை படைத்தது இந்திய அணி.

indvsnz

- Advertisement -

தற்போது ஒருநாள் தொடர் துவங்கியுள்ளது. இந்நிலையில் இன்னும் சில வாரங்களில் துவங்க இருக்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை, தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. வழக்கமான வீரர்களைத் தவிர இந்த போட்டியில் இளம் வீரர்களான சுபமன் கில் மற்றும் பிரீதிவ் ஷா ஆகியோருக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற இந்திய ஏ அணிக்காகப் பங்குபெற்ற இருவரும் அசத்தலாக ஆடியுள்ளனர். மேலும் உள்ளூர் தொடரிலும் நன்றாக தொடர்ந்து ஆடிய இவர்களுக்கு தற்போது இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

Gill

டி20 தொடரின் போது காயமடைந்த ரோகித் சர்மாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அவரது காயம் குணமாகும் வரை அவருக்கு பதிலாக இந்த இரண்டு வீரர்களும் கலந்து கொள்வார்கள் என்றே தெரிகிறது. பந்து வீச்சாளர்களில் இஷாந்த் ஷர்மா காயம் காரணமாக அணிக்கு வெளியே இருந்தார். இந்நிலையில் அவர் ஓரளவிற்கு உடல் தகுதியை அடைந்து விட்டார் என்று தெரிகிறது. ஆனால் உடல் தகுதியை நிரூபித்துவிட்டால் அவருக்கும் இந்த அணியில் இடம் கிடைப்பது உறுதி என்றே தெரிகிறது.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி; – விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, சுப்மான் கில், புஜாரா, ரகானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, விர்திமான் சகா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பாண்ட் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகம்மது சமி, நவ்தீப் சைனி, இஷாந்த் சர்மா ( உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும்)

Advertisement