இதே தினத்தில் அன்று…28 ஆண்டுகால கணவு…தோணியில் கணவு நிறைவேறிய நாள் இன்று – வீடியோ உள்ளே

dhoni
- Advertisement -

ஒருசில வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்வுகள் எப்பொழுதும் நினைவிலேயே தங்கிவிடும். வரலாற்றில் அப்படியொரு மறக்கமுடியாத நாள் தான் இந்த ஏப்ரல் 2.ஆம், சுமார் 28 ஆண்டுகளுக்கு பின்னர் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்ற அந்த தினம் தான் 02/04/2011.1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பிறகு 2003ம் ஆண்டு கங்குலி தலைமையிலான அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடியது.

wc

- Advertisement -

எப்படியும் வெற்றி நமக்கு தான் என்று பலகோடி இந்திய ரசிகர்கள் கனவு கண்டு கொண்டிருந்த வேளையில் இந்திய அணியின் நெஹ்ரா,ஜாகீர்கான் போன்ற வீரர்களின் மோசமான பந்துவீச்சினாலும், சச்சின் சேவாக் போன்ற ஜாம்பவான்களின் மோசமான பேட்டிங்காலும் ரசிகர்களின் கனவு சுக்குநூறாக உடைந்தது.அடுத்த உலகக்கோப்பையை இந்தியா எப்போது தமது வசமாக்கும் என்று பலகோடி இந்திய ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்க, உங்களது கனவை நினைவாக்க போகின்றோம் என்று சொல்லியே களமிறங்கியது 2011ல் தோனி தலைமையிலான இந்திய அணி.

2011ம் ஆண்டு உலகக்கோப்பை தான் சச்சினுக்கு கடைசி உலகக்கோப்பை எனவே இந்த உலகக்கோப்பையை கைப்பற்றி அதை சச்சினுக்கு சமர்ப்பிப்போம் என உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்னரே இந்திய வீரர்கள் பலரும் உறுதியளித்திருந்தனர்.இந்திய வீரர்கள் அளித்த உறுதியின் வீரியம் என்னவென்று இந்திய அணி விளையாடிய ஒவ்வொரு போட்டியின் வாயிலாக காண நேர்ந்தது.ஆம், 2011ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆரம்பத்திலிருந்தே மிகச்சிறப்பாக விளையாடிய இந்திய அணி அரையிறுதியில் பரமஎதிரியான பாகிஸ்தானை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

sacghi

மற்றொரு முனையில் ஆரம்பம் முதலே அசத்தலாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது.ஏப்ரல் 2ம் தேதி 2011ம் ஆண்டு நடைறும் இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லப்போவது இந்தியாவா இலங்கையா என உலகம் முழுவதிலுமிருந்து பல கோடி ரசிகர்கள் ஆர்வமோடு காத்திருக்க மும்பை வான்கடே மைதானத்தில் இறுதிப்போட்டி இறுதிப்போட்டி தொடங்கியது.முதலில் களமிறங்கி ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் 6விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்களை எடுத்தது.

- Advertisement -

275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறியது. முதல் பத்து ஓவர்கள் முடிவதற்குள் மூத்த வீரர்களான சச்சின் மற்றும் சேவாக்கின் விக்கெட்டுகளை இழந்து ஒருபுறம் தத்தளித்தது.பின்னர் களமிறங்கிய கம்பீரும், தோனியும் இலங்கை அணியினரின் பந்துகளை விளாச 48.2 ஓவர்களிலேயே வெற்றிக்கு தேவையான 274 ரன்களை கடந்து தோனி அடித்த சிக்ஸரால் 277 ரன்களை எடுத்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்று உலகக்கோப்பையை வென்றது.

இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கம்பீர் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டு 122பந்துகளில் 97 ரன்களை எடுத்தார். இந்திய அணியின் கேப்டன் தோனி இறுதிவரை நிலைத்து ஆடி 79பந்துகளில் 8பவுண்டரி மற்றும் 2சிக்ஸர்கள் உட்பட 91 ரன்களை குவித்து இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.உலகக்கோப்பை போட்டி தொடங்கும் முன்னரே சொன்னபடி கோப்பையை சொல்லி அடித்த இந்திய அணி சச்சினுக்கு அந்த கோப்பையை சமர்பித்தது.

சச்சினை சகவீரர்கள் தங்களது தோளில் வைத்து மைதானம் முழுவதும் சுற்றிவந்த அந்த காட்சியை எந்தவொரு கிரிக்கெட் ரசிகனாலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது தானே!வரலாற்றில் 28 ஆண்டுகளுக்கு பின்னர் கோப்பையை வென்று சாதனை படைத்த அதே தினம் தான் இன்று ஏப்ரல் 2.இன்று இந்த தினத்தை கிரிக்கெட் வீரர்கள் பலரும் நினைவுகூர்ந்து டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement