ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணி பயன்படுத்த இருக்கும் ஜெர்சிக்கு பின்னால் இருக்கும் சுவாரசியம் – விவரம் இதோ

ind jersey

இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் மோத இருக்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே பிசிசிஐ-யால் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

INDvsAUS

துபாயில் தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்ததால் இந்திய அணியில் தேர்வான வீரர்கள் அனைவரும் அங்கிருந்தே ஆஸ்திரேலிய சென்றடைந்தனர். 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் பிறகு அவர்கள் அங்கே பயிற்சியும் மேற்கொள்ள உள்ளனர். பயிற்சிக்குப் பிறகு நவம்பர் 27ஆம் தேதி இந்த தொடர் துவங்குகிறது.

இரண்டு மாதங்கள் நடைபெறும் இந்த தொடர் ஜனவரி 19ஆம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான டி20 போட்டிகளில் இந்திய அணி புதிய ஜெர்சி ஒன்றினை பயன்படுத்த உள்ளது. அந்த புதிய சீருடையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

jersey 1

இந்நிலையில் தற்போது இந்திய அணி பயன்படுத்த இருக்கும் இந்த ஜெர்சி எங்கிருந்து வந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 1992 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பயன்படுத்திய அந்த ஜெர்சியை அப்படியே வடிவமைத்து இந்திய அணி இந்த தொடரில் பயன்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

jersey

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த தொடரையும் அசத்தலாக விளையாடி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதே நேரத்தில் டி20 மாற்றம் ஒருநாள் தொடர்களில் முழுமையாக விளையாடும் கோலி முதல் டெஸ்ட் போட்டிக்கு பின்னர் தனது மனைவியின் பிரசவத்திற்காக நாடு திரும்புவது குறிப்பிடத்தக்கது.