கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடிய இந்தியா வீரர்கள் – காரணம் இதுதான்

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 297 ரன்கள் குவித்தது.

Ind

- Advertisement -

அதனை தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 48 ரன்கள் அடித்தார். கேப்டன் ஹோல்டர் 39 ரன்களை குவித்தார். அதன் பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்துள்ளது. இதனால் மொத்தம் 260 ரன்கள் இந்தியா முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். அதற்கு காரணம் யாதெனில் இந்தியாவின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று காலமானார். அதனைத்தொடர்ந்து இந்திய வீரர்கள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Jetly

அருண் ஜெட்லி பிசிசிஐ முன்னாள் துணைத்தலைவர் ஆகும் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement