இந்திய அணி இந்தூர் மைதானத்தில் வைத்துள்ள சாதனை பற்றி தெரியுமா ? – விவரம் இதோ

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கௌஹாத்தி மைதானத்தில் மழை காரணமாக ஒருவர் கூட பேசப்படாத நிலையில் போட்டி முடிவுக்கு வந்தது. இதனால் அடுத்து வரும் 2 போட்டிகளில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் தொடரில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ind

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது t20 போட்டி இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது. இந்தப் போட்டிக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது. அதன் காரணம் யாதெனில் புத்தாண்டு துவங்கி இந்திய அணிக்கு இது முதல் போட்டி.

அதுமட்டுமின்றி பலம் இல்லாத இலங்கை அணி இந்திய அணியை எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பதையும் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் இந்தூர் போட்டி குறித்து ஒரு மைதான ரெக்கார்டு தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

ind vs sl

அதன்படி இந்திய அணி இன்று மைதானத்தில் இதுவரை ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் என எதிலும் தோல்வி அடைந்ததே கிடையாது என்பதே அந்த ரெக்கார்ட் ஆகும். மேலும் இலங்கை அணியிடம் கடந்த 12 ஆண்டுகளாக இந்தியா எந்த ஒரு தொடரிலும் தோல்வி அடைந்தது கிடையாது என்ற காரணத்தாலும் இந்த இன்றைய போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை நிச்சயம் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -