இந்திய அணிக்க கிடைத்த டாப் 5 வலது கை பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் – லிஸ்ட் இதோ

- Advertisement -

இந்தியா ஆரம்பகட்ட முதலே ஒரு பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக இருந்திருக்கிறது .தொடர்ந்து பேட்ஸ்மேன்களை மட்டுமே உற்பத்தி செய்திருக்கிறது. இந்திய கிரிக்கெட்டின் கட்டமைப்பு அப்படி. தற்போதுவரை பேட்ஸ்மேன்கள் தான் அதிகம் இருக்கின்றனர்.தற்போது இந்தியா உருவாக்கிய 5 மிகச்சிறந்த வலதுகை பேட்ஸ்மேன் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் :

கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் இவர் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்லப்படலாம். இந்தியாவிலும் தற்போது கால கணக்குபடி இவர்தான் அதிக சாதனைகள் படைத்த கிரிக்கெட் வீரர். மும்பையைச் சேர்ந்தவர். 1989ம் ஆண்டிலிருந்து 24 வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடினார் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 15,921 ரன்களும் ,463 ஒருநாள் போட்டிகளில் ஆடி 18,476 ரன்கள் குவித்துள்ளார். இரண்டிலும் சேர்த்து 100 சதங்களை விளாசியுள்ளார் அதனை தாண்டி 154 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

gavaskar

சுனில் கவாஸ்கர் :

- Advertisement -

சச்சின் டெண்டுல்கருக்கு முன்னர் இந்தியாவின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாராட்டப்பட்டவர் இவர்தான். இவர் மும்பையை சேர்ந்தவர் அந்த காலகட்டத்தில் சச்சினை விட மிகப் பிரபலமாக இருந்தவர். முதன் முதலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை குவித்தவர் இவர் 125 டெஸ்ட் போட்டியில் விளையாடி 10,122 ரன்களை குவித்துள்ளார். 16 வருடங்கள் விளையாடி 34 சதங்கள் 45 அரை சதங்கள் விளாசியுள்ளார்.

Dravid

ராகுல் ட்ராவிட் :.

- Advertisement -

இந்தியாவின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்படும் இவர் வலதுகை ஆட்டக்காரர். இந்தியாவிற்காக 161 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 13 ,288 ரன்களும் 36 சதங்களும் 63 அரை சதங்களும் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளிலும் 344 போட்டிகளில் ஆடி 10,289 ரன்கள் குவித்துள்ளார் இதில் 12 சதங்களும் 83 அரை சதங்களும் அடங்கும் அதேபோல் வலது கை வீரரான இவர் 210 கேட்சுகளும் பிடித்துள்ளார்.

விரேந்தர் சேவாக் :

- Advertisement -

துவக்கம் முதலே அதிரடியாக ஆடுவதில் வல்லவர். இவரும் வலதுகை ஆட்டக்காரர் ஒருநாள் போட்டிகளில் 100-க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்து அசத்திய இந்திய வீரர். டெஸ்ட் போட்டிகளிலும் கூட 82.33 என்ற ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். 100 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்காக ஆடியுள்ளார். 251 ஒருநாள் போட்டிகளில் 8279 ரன்களும் 15 சதங்களும் விளாசியுள்ளார்.

kohli 2

விராட் கோலி :

தற்போதைய உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் .இவர் தொடர்ந்து ரன்களை மெஷின் போல் குவித்து வருகிறார். தற்போது வரை 70 சதங்கள் அடித்து விட்டார் 84 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7,202 ரன்கள் குவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளிலும் 209 போட்டிகளில் ஆடி 11520 ரன்கள் குவித்துள்ளார்.. இதன் சராசரி 60 ஆகும் டி20 போட்டிகளில் 2633 ரன்கள் குவித்துள்ளார் இன்னும் சில வருடங்களில் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் எனும் பெயரை கூட இவர் பெற வாய்ப்பு உள்ளது.

Advertisement