உள்நாடு மற்றும் வெளிநாட்டில் சாதிக்கக்கூடிய பெஸ்ட் லெவன் டெஸ்ட் அணி – வீரர்களின் விவரம் இதோ

Ind-lose
- Advertisement -

இந்திய அணி 1932 ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது வரை 296 வீரர்கள் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கின்றனர். இவர்களில் பல வீரர்கள் பல சாதனைகள் படைத்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் ராகுல் டிராவிட், கபில்தேவ் போன்ற பல ஜாம்பவான்கள் விளையாடி இருக்கின்றனர்.

dravid

இந்நிலையில் இந்திய அணி உள்நாட்டில் விளையாடினாலும், வெளிநாட்டு விளையாடினாலும் இத்தனை வருடங்களில் விளையாட்டு வீரர்களை வைத்து ஒரு அணி எடுக்கப்பட்டால் அந்த அணி அனைத்து அணிகளையும் வீழ்த்தும் வண்ணம் இருக்கும் ஒரு அணியை தேர்வு செய்திருக்கிறோம்.
இந்த அணியில் துவக்க வீரர்களாக உள்ளூர் போட்டிகளில் ஆடும் போது ரோகித் ஷர்மாவும் வெளியில் போட்டிகளில் ஆடும் போது பிரித்வி ஷாவும் விளையாடுவார்கள்.

- Advertisement -

மற்றொரு தொடக்க வீரராக மயங்க் அகர்வால் விளையாடுவார். உள்ளூரிலும் வெளியூரிலும் நன்றாகத்தான் விளையாடுகிறார். மூன்றாவது இடத்தில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தூண் என்று அழைக்கப்படும் செதேஷ்வர் புஜாரா விளையாடுவார். நான்காவது இடத்தில் விராட்கோலி கேப்டனாக செயல்படுவார்

Pujara

ஐந்தாவது இடத்தில் உள்ளூர் போட்டிகளிலும், வெளியூர் போட்டிகளிலும் நன்றாக ஆடும் அஜின்கியா ரஹானே இடம் பிடிப்பார். ஆறாவது இடத்தில் சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவும் ஏழாமிடத்தில் 2 விக்கெட் கீப்பராக, உள்ளூர் போட்டிகளில் விருத்திமான் சஹா வெளிநாடுகளில் ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடுவார்கள்.

Ishanth

ஆல்-ரவுண்டராக உள்ளூர் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின், வெளியூர்களில் ஹர்திக் பாண்டியா செயல்படுவார்கள். வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, முகமது சமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் செயல்படுவார்கள்.

Advertisement