வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு தள்ளி வைப்பு – தோனி தான் காரணமா?

dhoni

உலகக்கோப்பை போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ்சுக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி 20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்கவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதற்கான இந்திய அணி தேர்வு இன்று நடைபெறும் என்று கூறிப்பட்டிருந்தது. ஆனால் இன்று அந்த அணி தேர்வு நடக்காது என்று தற்போது கூறப்பட்டுள்ளது.

Kohli

எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வு குழு இன்று மும்பையில் இந்திய அணியை தேர்வு செய்யவிருந்த நிலையில் அணிக்குள் பல முக்கிய பிரச்சனைகள் இருப்பதால் அணித்தேர்வை ஞாயிற்றுக்கிழமைக்கு ஒத்துவைத்துள்ளது. இதற்க்கு மிக முக்கிய காரணங்களாக கூறப்படுவது என்னவென்றால், அணியின் மிக முக்கிய வீரராக கருதப்படும் தோனியின் நிலைப்பாடு மற்றும் அவரை அணியின் சேர்க்கலாமா வேண்டாமா என்ற மாறுபட்ட கருத்துக்கள், அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்பதில் உள்ள சர்ச்சைகள், பூம்ராவின் ஓய்வு இப்படி பல காரணங்கள் அதில் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

அது மட்டும் அல்லாது, காயத்தில் உள்ள சில வீர்களின் உடல் தகுதி சான்றிதழ் சனிக்கிழமை மாலை தான் கிடைக்கும் என்பதாலும், தேர்வு குழு குறித்த சில முக்கிய கருத்துக்களை உச்சநீதி மன்றம் கூறியுள்ளதாலும் இந்திய அணி தேர்வு ஞாயிற்று கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் தோனி இந்த தொடரில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று தோனியின் ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். அவர்களின் ஆசை நிறைவேறுமா என்பது ஞாயிற்று கிழமை தான் தெரியும்.