டி20 உ.கோ இந்திய அணியில் தேர்வான 15 பேரை தவிர்த்து ரிசர்வ் வீரர்களாக – தேர்வான 3 வீரர்கள்

IND
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பரவி வந்த கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கிறது. அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில் தகுதிச்சுற்று அடிப்படையில் 4 அணிகள் தேர்வாவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

cup

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போன்று நீண்ட ஆலோசனைக்குப் பிறகு நேற்று முன்தினம் இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. கேப்டனாக விராட் கோலி, துணை கேப்டனாக ரோகித் சர்மாவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி இந்திய அணியுடன் ஆலோசகராக பணியாற்ற இருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை இந்திய அணியின் நிர்வாகமான பி.சி.சி.ஐ அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

மேலும் அது தவிர இந்த தொடருக்கான இந்திய அணியின் மூன்று ஸ்டான்ட்பை வீரர்கள் அதாவது பேக்கப் வீரர்கள் இடம் பெற்றுள்ளார்கள். முதன்மை அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களில் யாரேனும் காயத்தால் பாதிக்கப்பட்டாலோ ? விளையாட முடியாத சூழல் ஏற்பட்டாலோ ? அவர்களுக்கு பதிலாக இந்த மூவர் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

அதன்படி இந்திய அணியின் ஸ்டான்ட்பை வீரர்களாக இருக்கும் அந்த மூன்று வீரர்கள் யாரெனில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர், வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர்தான். திறமையான வீரர்களாக இருந்தும் இவர்கள் மூவரும் ஸ்டான்ட்பை வீரர்களாக இந்திய அணியில் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement