இந்திய 3 ஆவது டி20 போட்டியில் ஜெயிக்கணுனா இதை செய்ஞ்சே ஆகணும் – முக்கியமான 3 விடயங்கள் இதோ

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இன்று நடைபெற இருக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதினால் இன்றைய போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் கொரோனோ வைரஸ் காரணமாக க்ருனால் பாண்டியா பாதிக்கப்பட்டுள்ளதால் 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பவுலர்களுடன் இந்திய அணி ஆடி வருகிறது.

INDvsSL

இன்று முக்கிய மூன்று மாற்றங்களை செய்தால் மட்டுமே இந்திய அணி வெற்றி பெறும் என்ற நிலைமை உண்டாகி உள்ளது. அதன் தொகுப்பை நாங்கள் கீழே வழங்கியுள்ளோம். அதன் படி துவக்க வீரராக தவானுக்கு பதிலாக கெய்க்வாட் மற்றும் படிக்கல் ஆகியோர் துவக்க வீரராக களமிறங்கலாம்.

- Advertisement -

அப்படி இறங்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கிடைக்கும். மேலும் அனுபவ வீரரான தவான் எந்த இடத்திலும் விளையாட தகுதியானவர் என்பதனால் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும். அதன்பிறகு காயமடைந்த சைனிக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் களமிறங்கலாம். அவர் நல்ல ஸ்விங் பவுலர் என்பதனால் அவர் நல்ல தேர்வாக இருப்பார்.

Varun

அதேபோன்று மூன்றாவதாக வருண் சக்கரவர்த்தியைப் பவர்பிளேவில் பந்துவீச வைக்க வேண்டும் ஏற்கனவே டி20 போட்டியில் ஸ்பெஷலிஸ்ட் ஆன அவர் பவர்பிளேவில் அதிகம் பந்துவீசி விக்கெட் வீழ்த்துவதால் இன்றைய போட்டியில் அவரை பவர்பிளேவில் பந்துவீச வைக்க வேண்டும். இந்த மூன்று முக்கிய மாற்றங்களையும் செய்தால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது உறுதி.

- Advertisement -
Advertisement