- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs SL : ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் படைக்காத சாதனையை நிகழ்த்தி – வரலாறு படைத்த இந்தியா

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மூன்றாவது போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்டம் வெற்றியை பெற்ற இந்திய அணியானது இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியதை அடுத்து தற்போது ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதோடு இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை கணக்கில் கொண்டு முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வேறு எந்த ஒரு அணியும் படைக்காத புதிய சாதனையை இந்திய அணி நிகழ்த்தி வரலாறு படைத்துள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

இப்படி எந்த ஒரு சர்வதேச அணியுமே ஒருநாள் போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கிடையாது. அந்த அரிதான சாதனையை தற்போது இந்திய அணி செய்துதுள்ளது. இதற்கு முன்பு நியூசிலாந்து அணி கடந்த 2008-ஆம் ஆண்டு அயர்லாந்து அணியை 290 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்ததே பெரிய வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாக பார்க்கப்பட்டு வந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : என்னங்க பெரிய பும்ரா. இந்த வேர்ல்டு கப்ல கலக்கப்போறதே இந்த பவுலர் தான் – விராட் கோலி கருத்து

அந்த சாதனையை தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முறியடித்துள்ளது. இந்திய அணி இதற்கு முன்பாக பெர்முடா அணியை கடந்த 2007-ஆம் ஆண்டு 257 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே பெரிய வித்தியாசத்தில் இந்திய அணி பற்ற வெற்றியாக இருந்தது. இந்நிலையில் அந்த சாதனையை தகர்த்து தற்போது 317 ரன்கள் வித்தியாசத்தில் பெறப்பட்ட இந்த வெற்றிதான் ஒருநாள் கிரிக்கெட்டில் பெறப்பட்ட பெரிய வெற்றி என்ற சரித்திர சாதனையாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by