நாளைய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணி இதுதான் – லிஸ்ட் இதோ

Ind
- Advertisement -

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி 277 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில் யாரும் எதிர்பாராத விதமாக அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப பலமாக பயிற்சி செய்து வருகிறது. மேலும் ரஹானேவின் தலைமையில் ஆஸ்திரேலியா தொடரை வென்ற இந்திய அணி தற்போது கோலியின் தலைமையில் இங்கிலாந்து அணியுடன் தோல்வி அடைந்துள்ளதால் கோலியின் கேப்டன்சி மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாளைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

அதன் காரணமாக நாளைய போட்டியில் இந்திய அணியில் யார் ? யார் ? விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்தவகையில் முதல் டெஸ்ட் போட்டியின் போது சிறப்பாக விளையாடிய கில், புஜாரா, கோலி, பண்ட், வாஷிங்டன் ஆகியோர் நிச்சயமாக இடம் பிடிப்பார்கள் இவர்கள் அனைவரும் கடந்த போட்டியில் ஒரு அரைசதம் அடித்துள்ளனர். அதுமட்டுமன்று ரோகித் ரஹானே ஆகியோர் இரண்டு இன்னிங்சிலும் சொதப்பினாலும் அவர்கள் சீனியர் வீரர்கள் என்ற காரணத்தினால் நாளைய போட்டியில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

pant 2

அதேபோன்று பந்துவீச்சில் அஸ்வின் சிறப்பாக பந்து வீசினார். வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோரது செயல்படும் திருப்திகரமாக அமைந்தது. ஆனால் சபாஷ் நதீம் மற்றும் வாஷிங்டன் சுந்தர் பவுலிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. அதன் காரணமாக நதீம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அல்லது அக்சர் பட்டேல் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

- Advertisement -

axar 1

நம்மால் கணிக்கப்பட்ட இந்த உத்தேச அணியே நாளைய போட்டியில் இறங்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் இதில் சிறிய மாறுதல்கள் கூட இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது இந்திய உத்தேச அணி இதோ :

1) கில், 2) ரோஹித், 3) புஜாரா, 4) கோலி, 5) ரஹானே, 6) பண்ட், 7) சுந்தர், 8) அஷ்வின், 9) அக்சர் படேல் (அ) குல்தீப் யாதவ், 10) இஷாந்த், 11) பும்ரா

Advertisement