இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர் என பெரிய சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஆகியவை நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரை சமநிலையில் உள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடர் முழுவதுமே இந்தியாவில் கிட்டத்தட்ட பத்து வீரர்களுக்கு மேல் காயமடைந்து அணியில் இருந்து வெளியேறி உள்ளனர். மேலும் வரும் வெள்ளிக்கிழமை துவங்க உள்ள கடைசி போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்வதிலேயே பெரும் சவால் இருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் அந்த அளவிற்கு வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர்.
இதனால் பிரிஸ்பேனில் நடைபெறும் நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஏகப்பட்ட வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் தற்போது 3வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா, விகாரி மற்றும் பும்ரா ஆகியோர் வெளியேறி உள்ளதால் அவர்களது இடத்தில் விளையாடும் வீரர்களை இந்திய அணி தேர்வு செய்தாக வேண்டும்.
அதன்படி தற்போது நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் உத்தேச பட்டியலை தான் நாம் இந்த பதிவில் காண உள்ளோம். இந்த அணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட அணி கிடையாது. உத்தேசமாக நம்மால் கணிக்கப்பட்ட அணி என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த போட்டியில் ஜடேஜாவிற்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் பும்ராவிற்கு பதிலாக நடராஜன் ஆகியோர் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் விகாரியின் இடத்திற்கு பண்ட் இம்முறை விக்கெட் கீப்பிங் செய்யாமல் முழுநேரமும் அணியில் பேட்ஸ்மேனாகவும், சஹா விக்கெட் கீப்பராகவும் தொடர்வார்கள் என்று தெரிகிறது. ஏனெனில் ஏற்கனவே ராகுல் மற்றும் அகர்வால் காயத்தால் விளையாட முடியாத சூழ்நிலையில் பண்ட் தற்போது முழுநேரமாக பேட்ஸ்மேனாகவே அடுத்த போட்டியில் வெளியிடுவார் என்று தெரிகிறது.
4 ஆவது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி (பிளெயிங் லெவன்) :
1) ரோஹித் 2) கில் 3) ரஹானே 4) புஜாரா 5) பண்ட் 6) சஹா 7) குலதீப் 8) அஷ்வின் 9) சைனி 10 ) சிராஜ் 11) நடராஜன்