இந்திய அணி முதலில் பேட்டிங் : பிளேயிங் லெவனில் இடம்பெற்ற தமிழக வீரர் – ரசிகர்கள் மகிழ்ச்சி

INDvsPAK
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு காரணமாக இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி தற்போது துபாய் சர்வதேச மைதானத்தில் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியது இல்லை என்ற நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த பலப்பரிட்சை நடைபெற்று வருகிறது.

pak 1

- Advertisement -

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் ? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

இந்திய அணியின் கேப்டன் கோலி டாஸிற்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறாத வீரர்கள் குறித்து பேசினார். அதன்படி இந்திய அணியில் அஷ்வின், ஷர்துல் தாகூர், ராகுல் சாகர், இஷான் கிஷன் ஆகியோர் விளையாடவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாக ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாகவும் மிடில் ஆர்டரில் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் ஆகியோரும் விளையாடுகின்றனர்.

jadeja 1

ஆல்-ரவுண்டராக ஹார்டிக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோர் விளையாடுகின்றனர். பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை பும்ரா, ஷமி, வருன் சக்ரவர்த்தி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் விளையாடுகின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய ஜெர்சியில் இருந்த 3 ஸ்டார்கள் நீக்கப்பட்டு ஒரு ஸ்டார் மட்டும் இடம்பெற என்ன காரணம் தெரியுமா ?

இந்த போட்டியில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி அணியில் இடம் பெற்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் சமீபகாலமாகவே ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக பந்து வீசி வரும் வருண் சக்கரவர்த்திக்கு இன்றைய போட்டியில் இடம் கிடைத்தது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement