இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆனது தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக தற்போது இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது.

இதன்காரணமாக இன்று நடைபெற இருக்கும் மூன்றாவது டி20 போட்டியில் வென்று தொடரை கைப்பற்றப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக 9 வீரர்கள் இடம் பெறாத நிலையில் நேற்றைய போட்டியில் 4 வீரர்கள் அறிமுகம் ஆகியிருந்தனர்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வீரராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகின்றது. இரண்டாவது போட்டியின்போது பீல்டிங் செய்த நவதீப் சைனி கேட்ச் பிடிக்க முயன்று இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகமாகி உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் அவருக்கு பதிலாக மற்றொரு வீரராக அறிமுகம் ஆகும் வாய்ப்பு உள்ளது. அதன்படி இலங்கை சென்ற இந்திய அணிக்கு நெட் பவுலர்களாக சென்ற அர்ஷ்தீப் சிங் மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவரில் ஒருவருக்கு இன்றைய போட்டியில் அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன் இதோ :
1) தவான், 2) கெய்க்வாட், 3) படிக்கல், 4) சாம்சன், 5) ராணா, 6) புவனேஷ்வர் குமார், 7) ராகுல் சாகர், 8) வருண் சக்ரவர்த்தி, 9) குல்தீப் யாதவ், 10) சக்காரியா, 11) சந்தீப் வாரியர் / அர்ஷ்தீப் சிங்



