இன்றைய முதலாவது டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

indvssl
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று ஜூலை 25 ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீரர்களான ப்ரித்வி ஷா, படிக்கல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இங்கிலாந்து தொடருக்கான அணியில் இணைய பயணிக்க உள்ளதால் தற்போது இந்திய அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Gowtham

- Advertisement -

இருப்பினும் ஷிகார் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியானது நிச்சயம் இலங்கை அணியை சமாளித்து ஒருநாள் தொடரை வென்றது போன்று இந்த டி20 தொடரையும் கைப்பற்றும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் இரண்டு வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி இந்த டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த துவக்க வீரர்கள் ப்ரித்வி ஷா மற்றும் படிக்கல் ஆகிய இரண்டு வீரர்களும் இங்கிலாந்து செல்வதால் நிச்சயம் இந்த போட்டியில் தவானுடன் ருதுராஜ் கெய்க்வாட் அறிமுக வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ruturaj

அதேபோன்று மற்றொரு வீரராக தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி இந்த போட்டியில் விளையாடுவது உறுதியாகி உள்ளது. மேலும் மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் இல்லாததனால் இஷான் கிஷனுடன் சேர்ந்து மற்றொரு வீரராக சஞ்சு சாம்சன் அணியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. இந்திய அணியின் டி20 பிளேயிங் லெவன் இதோ :

varun 1

1) ஷிகர் தவான், 2) ருதுராஜ் கெய்க்வாட், 3) இஷான் கிஷன், 4) சஞ்சு சாம்சன், 5) மனீஷ் பாண்டே/நிதீஷ் ராணா, 6) ஹார்டிக் பாண்டியா, 7) க்ருனால் பாண்டியா, 8) புவனேஷ்வர் குமார், 9) தீபக் சாகர், 10) வருண் சக்ரவர்த்தி, 11) யுஸ்வேந்திர சாஹல்

Advertisement