- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நடப்பு 2023 ஆம் ஆண்டிற்கான இந்திய வீரர்களின் ஒப்பந்த பட்டியல் வெளியீடு. யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்? – வாங்க பாக்கலாம்

இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ ஆண்டுதோறும் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை வெளியிட்டு அதன்படி வீரர்களுக்கு ஊதியம் வழங்குவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான புதிய ஒப்பந்த பட்டியலை பி.சி.சி.ஐ-யை வெளியிட்டுள்ளது. இந்த வருடாந்திர ஒப்பந்தமானது கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான கால அளவீட்டினை கொண்டுள்ளது என்றும் அவர்கள் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளனர்.

அதன்படி பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களின் வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் மொத்தம் நான்கு பிரிவுகளின் கீழ் வீரர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் சம்பளப் பட்டியல் பிரிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஏ ப்ளஸ் பிரிவு என்கிற உச்ச வரம்பில் ரூபாய் 7 கோடி என்கிற சம்பளத்தின் அடிப்படையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று அதற்கு அடுத்த ஏ பிரிவில் 5 கோடி ரூபாய் என்கிற சம்பளத்தின் அடிப்படையில் ஹார்டிக் பாண்டியா, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய ஐந்து வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து ரூபாய் மூன்று கோடி என்கிற அடிப்படை ஒப்பந்தத்தின்படி பி பிரிவில் சத்தீஸ்வர் புஜாரா, கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் ஆகிய ஆறு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இதையும் படிங்க : IPL2023 : பாதி ஐ.பி.எல் தொடரை தவறவிட இருக்கும் ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரர் – விவரம் இதோ

அதேபோன்று ரூபாய் ஒரு கோடி என்கிற கடைசி சி பிரிவில் உமேஷ் யாதவ், ஷிகர் தவான், ஷர்துல் தாகூர், இஷான் கிஷன், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன், கே.எஸ் பரத் ஆகிய 11 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by