அடுத்த ஒரு வருஷத்துக்கு நோ லீவ். ஓய்வின்றி விளையாட இருக்கும் இந்திய அணி – முழு லிஸ்ட் இதோ

Ind

கரோனா வைரஸ் காரணமாக ஐந்து மாதங்கள் இந்திய வீரர்கள் வீட்டில் ஓய்வில் இருந்தனர். அதனை தொடர்ந்து தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்துவிட்டது. இரண்டு மாதங்கள் ஓய்வில்லாமல் விளையாடிய இந்திய வீரர்கள் உடனடியாக இரண்டு நாட்களில் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்டு விட்டனர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் நவம்பர் 27ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் துவங்குகிறது அதன்பின்னர் ஜனவரி 15ஆம் தேதி வரை ஓய்வில்லாமல் இந்திய வீரர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள் .

INDvsAUS

மேலும் கொரானா வைரஸ் கட்டத்தில் 5 மாத காலத்தில் நடத்தப்பட வேண்டிய பல தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டன. இதன் காரணமாக இவற்றை அனைத்தையும் வெகு சீக்கிரமாக நடத்திவிட பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது. இதனையொட்டி அடுத்த வருடம் முழுவதும் இந்திய அணிக்கு தொடர்ந்து போட்டிகள் இருக்கும் என்றும் தெரியவந்திருக்கிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடர் ஜனவரியில் முடிவடையப் போகிறது. அதன் பின்னர் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் ஒருநாள் டி20 தொடர்களில் விளையாடப் போகிறது. இது முடிந்தவுடன் ஏப்ரல் மே ஜூன் ஆகிய மாதத்தில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நடக்கப்போகிறது.

Ind-2

ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் ஜூன் மாதம் இந்தியா இலங்கை சென்று மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதனை தொடர்ந்து ஜூன் ஜூலையில் ஆசிய கோப்பை டி20 தொடரில் விளையாடுகிறது இதில் 6 போட்டிகளில் இந்திய அணி விளையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் ஜிம்பாப்வேக்கு செல்லும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

அப்படியே ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதம் இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. உடனடியாக அக்டோபர் மாதம் இந்தியா திரும்பியவுடன் தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு வந்து 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடும் இது. முடிவடைந்த பின்னர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடக்கப்போகிறது. இதில் குறைந்தபட்சம் இந்திய அணி 6 போட்டிகளில் விளையாடும்.

இந்த டி20 உலக கோப்பை தொடர் முடிவடைந்தவுடன் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு வந்து 2 டெஸ்ட் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதன் பின்னர் இது முடிவடைந்தவுடன் டிசம்பர் மாதம் இந்தியா தென்னாபிரிக்கா சென்று 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த அட்டவணையை பார்த்த நமக்கே மூச்சு வாங்குகிறது என்றால், அடுத்த வருடம் ஒரு வாரம் கூட ஓய்வு இல்லாமல் விளையாட போகும் இந்திய அணியின் வீரர்களை நினைத்துப் பாருங்கள்.