இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் இன்று இரவு 7 மணிக்கு அறிவிப்பு. இவரே புதிய பயிற்சியாளர் – அதிகாரபூர்வ அறிவிப்பு

- Advertisement -

இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

Ravi

கடந்த ஜூலை 30 ஆம் தேதி வரை இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இந்த விண்ணப்பங்களை கபில்தேவ் தலைமையிலான தேர்வு குழு பரிசீலித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய பயிற்சியாளர் பதிவிற்கு 2000 விண்ணப்பங்கள் வந்தன. அதிலிருந்து 6 பேர் கொண்ட ஷார்ட் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கான நேர்காணல் இன்று மும்பையில் நடந்து வருகிறது.

- Advertisement -

டாம் மூடி, மைக் ஹசன், கேரி கிறிஸ்டன், ஜெயவர்த்தனே, ராபின் சிங் மற்றும் லால்சந்த் ராஜ்புட் ஆகியோரிடம் நேர்காணல் இன்று நடத்தப்படுகிறது. இதிலிருந்து இறுதிப் பட்டியல் தேர்வு செய்து இவர்களில் ஒருவர் புதிய பயிற்சியாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் கோலி மற்றும் கபில்தேவ் ஆகியோர் ரவி சாஸ்திரியை புதிய பயிற்சியாளராக முன்மொழிந்துள்ள தால் அவரே மீண்டும் பயிற்சியாளராக பிசிசிஐ தேர்வு செய்ய உள்ளது.

ravi koli

ஏனெனில் கபில்தேவ் தலைமையிலான குழு ரவிசாஸ்திரி பயிற்சியாளர் ஆவதையே விரும்புகிறது. மேலும் இந்திய அணியின் கேப்டனின் விருப்பமும் அதுவே என்பதால் மீண்டும் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக தொடர்வார் என்று தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று மாலை 7 மணிக்கு பிசிசிஐ பத்திரிக்கையாளர் சந்திப்பில் அதிகாரபூர்வமாக இந்த தகவலை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement