2021 ஆம் ஆண்டு இந்திய அணி விளையாட இருக்கும் தொடர்கள். இத்தனை போட்டிகளா ? – முழு லிஸ்ட் இதோ

IND

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. கிரிக்கெட் உலகத்திற்கு 2020ஆம் ஆண்டு சற்று கடினமான ஆண்டாகத் தான் அமைந்திருக்கிறது. திட்டமிடப்பட்ட பல்வேறு தொடர்கள் சரியாக நடத்தப்படவில்லை. பல தொடர்கள் தள்ளிவைக்கப்பட்ட தொடர்கள் கைவிடப்பட்டது. இந்நிலையில் 2021ஆம் ஆண்டு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடும் முழுமையான அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் இந்திய அணி 21 டெஸ்ட் போட்டிகளிலும் 12 ஒருநாள் போட்டிகளிலும் 21 டி20 போட்டிகளிலும் விளையாட போகிறது.

IND

அதனைத் தொடர்ந்து உலக கோப்பை ஆசிய கோப்பை மற்றும் ஐபிஎல் கோப்பை என பல போட்டிகள் இருக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை இந்திய அணி சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் தான் ஐபிஎல் தொடரில் விளையாடியது. அதற்குப் பிறகு தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

அதற்கு முன்னர் டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் விளையாடியது. இந்நிலையில் இந்த வருடம் பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவில் வந்து நான் 4 டெஸ்ட் போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதனை தொடர்ந்து ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஐபிஎல் தொடர் நடக்கப்போகிறது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இந்திய அணி இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

ind

அதனை தொடர்ந்து ஆசிய கோப்பை தொடரிலும் அதன் பிறகு ஜிம்பாவே சென்று மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாட போகிறது. அதன் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்து நாட்டில் 5 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி பங்கேற்று விளையாடுகிறது. அதன்பிறகு ஆக்டோபர் மாதம் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவிற்கு வந்த மூன்று ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடப்போகிறது.

- Advertisement -

ind-1

நவம்பர்-டிசம்பரில் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டெஸ்ட், மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. டிசம்பர் மாதம் தென்ஆப்பிரிக்கா சென்று மூன்று டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.