ஆஸி அணிக்கெதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஏற்படவுள்ள 3 முக்கிய மாற்றங்கள் – விவரம் இதோ

INDvsAUS
- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கடந்த நவ்.17ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடந்த இந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை பெற்றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த மாற்றங்களை இந்த பதிவில் காணலாம்.

Ind

- Advertisement -

இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவியின் பிரசவ காலத்தின் போது நான் அருகில் இருக்க வேண்டும் என்பதால் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்தவுடன் இந்தியா திரும்புவதாக அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, முதல் டெஸ்ட் போட்டியில் பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் முகமது சமிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் இவரும் மீதமுள்ள போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.

ஏற்கனவே இந்திய அணியின் நிலைமை மோசமாக இருக்கும் போது இவர்கள் இருவரும் அணியில் இருந்து விலகுவது மாபெரும் இழப்பாக கருதப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் பதிலாக கேஎல் ராகுல் மற்றும் முகமது சிராஜ் அணியில் சேர்க்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இளம் வீரர் முகமது சிராஜ் பயிற்சி ஆட்டத்தின் போது 5 விக்கெட்களை வீழ்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

siraj 2

இருப்பினும், மூன்றாவது பந்துவீச்சாளருக்கான போட்டியில் நவதீப் சைனி மற்றும் முகமது சிராஜ் இருவருக்குமிடையே போட்டிகள் நிலவி வருகிறது. கே எல் ராகுல் விராட் கோலியின் இடத்திற்கு பதிலாக களமிறங்குவார் என்பதில் சந்தேகமில்லை. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரித்திவி ஷா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தற்போது அவருக்கு பதிலாக இளம் வீரர்கள் சுப்மன் கில் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புகள் இருக்கிறது.

Pant 1

அதேபோல் விருத்திமான் சாஹாவிற்கு பதிலாக ரிஷப் பண்ட் 2வது டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவார் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் பண்ட் நல்ல பேட்டிங் ரெக்கார்ட் வைத்திருப்பதால் அவரும் இந்த போட்டியில் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த 3 முக்கிய மாற்றங்கள் அணியில் இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement