தென்னாபிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. இத்தனை மாற்றங்களா ? – விவரம் இதோ

india
- Advertisement -

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று இந்தியா திரும்பியுள்ளது. இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

Ind

- Advertisement -

இந்த தொடர் வரும் 12ஆம் தேதி துவங்க உள்ள இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஆறு மாதங்கள் காயத்தால் அணிகள் இடம் பெறாமல் தவித்து வந்த ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.அதேபோல நியூஸிலாந்து தொடருக்கு முன்பாக காயத்தின் காரணமாக விளையாடிக் கொண்டு விலகிய ஷிகர் தவான் மற்றும் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏற்கனவே தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து தற்போது சுனில் ஜோஷி தலைமையிலான தேர்வு குழுவினர் இந்த அணியை தேர்வு செய்துள்ளனர்.

Pandya

அதன்படி வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் மற்றும் ஆல்ரவுண்டர் ஷிவம் துபே ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல ப்ரித்வி ஷா இந்த தொடரில் இடம்பெற்றுள்ளார். மேலும் இந்த தொடரில் ஷிகர் தவானும், ப்ரித்வி ஷாவும் துவக்க வீரராக களம் இறங்குவார்கள்.

- Advertisement -

ஹர்டிக் பண்டியா உடல்நலம் தேறி உள்ளூர் டி20 போட்டியில் இரண்டு சதங்களை அடித்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதால் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். ஷிகார் தவான் வருகையால் மயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். முதல் ஒருநாள் போட்டி 12 ஆம் தேதி, இரண்டாம் ஒருநாள் போட்டி 15ஆம் தேதி, மூன்றாவது ஒருநாள் போட்டி 18 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

அணி வீரர்கள் விவரம் : ஷிகார் தவான், பிரித்வி ஷா, விராட் கோலி, கே எல் ராகுல், மணிஷ் பண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்திப் யாதவ், சாஹல், சைனி மற்றும் கில் ஆகியோர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement