அறிமுகமான தமிழக வீரர் வருண்.. கோலி இஸ் பேக்.. 2வது ஒன்டேவில் இந்திய அணியில் 2 மாற்றம் செய்த ரோஹித்

Varun Chakravarthy
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி வருகிறது. நாக்பூரில் துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி பிப்ரவரி ஒன்பதாம் தேதி மதியம் 1.30 மணிக்கு ஓடிஸா மாநிலம் கட்டாக் நகரில் துவங்கியது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் விராட் கோலி மீண்டும் விளையாட வருவதாக கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார். கடந்தப் போட்டியில் முழங்காலில் சந்தித்த காயத்தால் விலகிய அவர் இந்தப் போட்டியில் விளையாடுவது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

வருண் அறிமுகம்:

இருப்பினும் சுமாரான ஃபார்மில் இருக்கும் அவர் இந்தப் போட்டியில் நன்றாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்ப்பு பார்க்கிறார்கள். மறுபுறம் அவர் வருவதால் கடந்தப் போட்டியில் அறிமுகமான ஜெய்ஸ்வால் இந்தப் போட்டியில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அதே போல தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இந்தப் போட்டியில் அறிமுகமாக களமிறங்குவதாகவும் ரோஹித் அறிவித்தார்.

கம்பேக் கொடுத்தது முதல் அபாரமாக பவுலிங் செய்து டி20 கிரிக்கெட்டில் அசத்தி வரும் அவர் உள்ளூர் ஒருநாள் விஜய் ஹசாரே தொடரிலும் 18 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதன் காரணமாக இந்தத் தொடரில் தேர்வு செய்யப்பட்ட அவருக்கு இந்தப் போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அசத்தும் பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபியிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று ரோகித் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

- Advertisement -

விராட் இஸ் பேக்:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதல் போட்டியில் எங்களிடம் நல்ல செயல்பாடு வந்தது. அதையே நான் விரும்பினேன். நீண்ட நாட்கள் களத்தில் இல்லாவிட்டாலும் எனர்ஜி நன்றாக இருந்தது. முதல் 2 விக்கெட்டுகளை இழந்தப் பின்பும் வெற்றிப் பெற்றதை பார்த்தது சூப்பராக இருந்தது. ஸ்ரேயாஸ் அதிரடியாக விளையாடியதற்கு பெருமையுடன் இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: சச்சின் மற்றும் டிராவிடை கடந்து சாதனை நிகழ்த்த காத்திருக்கும் ரோஹித் சர்மா – விவரம் இதோ

“சுப்மன், அக்சர் ஆகியோர் விளையாடியதையும் மறக்கக்கூடாது. இந்தப் போட்டியில் கருமண்ணால் பிட்ச் இருப்பதால் அதுப் பற்றி உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை அது ஸ்லோவாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். எங்கள் அணியில் 2 மாற்றங்கள். விராட் கோலிக்காக ஜெய்ஸ்வால் வழி விடுகிறார். குல்தீப் ஓய்வு எடுத்துக் கொள்வதால் வருண் சக்கரவர்த்தி அறிமுகமாக விளையாடுகிறார்” என்று கூறினார். மற்ற படி கடந்தப் போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களும் இந்தப் போட்டியிலும் விளையாடுகிறார்கள்.

Advertisement