எல்லோரும் காற்று மாசுபாட்டை நினைக்கும் போது இந்திய அணி வீரர்கள் எதைப்பற்றி நினைக்கிறார்கள் தெரியுமா ?

Ind-2

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று டெல்லி மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். மேலும் காற்று மாசுபாட்டால் இந்த போட்டியில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா என்று இன்று தெரியவரும்.

IND 1

ஆனால் போட்டி திட்டமிட்டபடி உறுதியாக நடக்கும் என்றும் பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கு முன் சில நாட்களுக்கு முன்பு பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹசன் ஐசிசி-யால் தடை செய்யப்பட்டார். இது அந்த அணிக்கு பெரிய பலவீனமாக அமையும் மேலும் காற்று மாசுபாடு குறித்து அனைவரும் யோசிக்கும் இவ்வேளையில் இந்திய அணி இந்த போட்டியில் வேறொரு விடயத்தை யோசித்து வருகிறது.

அது யாதெனில் இந்த தொடரில் அதிக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை டி20 உலகக்கோப்பையில் அவர்களை பண்படுத்துவேத இந்திய அணியின் தற்போதைய திட்டமாகும். அதன்படி இன்றைய போட்டியில் ஷிவம் துபே, க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ராகுல் சாகர் என அனைவர்க்கும் வாய்ப்பு அளித்து அவர்களின் ஆட்டத்திறனை பரிசோதிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

டெல்லி வீரரான பண்ட் இந்த போட்டியில் விளையாடுவார் என்றும் மேலும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு இந்த தொடரில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஷாகிப் இல்லாத பலவீனமான பங்களாதேஷ் அணியை இந்திய அணி புரட்டி எடுக்கும் முனைப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -