இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி செய்த தவறுக்காக அபராதம் விதித்த ஐ.சி.சி – விவரம் இதோ

Sundar-1

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று முன்தினம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான ஜேசன் ராய் 46 ரன்களும், கேப்டன் மோர்கன் 28 ரன்கள் குவித்தனர். இந்திய அணி சார்பாக சிறப்பாக பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

kohli 3

அதனைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 18 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் துவக்க வீரராக அறிமுகமான இஷான் கிஷன் போட்டியிலேயே 32 பந்துகளில் 56 ரன்கள் குவித்து அசத்தினார். கேப்டன் விராட் கோலி 49 பந்துகளை சந்தித்து 73 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் இந்த இரண்டாவது டி20 போட்டியில் விளையாடிய இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் இந்திய அணி வீரர்ககள் என அனைவருக்கும் போட்டியின் டி20 போட்டியின் போது முதலில் பந்துவீசிய இந்திய அணி ஐசிசியின் விதிமுறைகளுக்கு உட்பட்ட நேரத்தை கடந்து காலம் தவறி பந்து வீசியதாக போட்டியின் உச்ச நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் இந்திய அணி செய்த தவறுக்காக அணி மீது புகார் அளித்து இருந்தார்.

இதன்காரணமாக ஐசிசி விதிகளின்படி (Article 2.22) என்ற விதி முறையின் அடிப்படையில் இந்திய அணி போட்டியில் குறிப்பிட்ட நேரத்தை விட பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்ட காரணத்தினால் “ஓவர் ஷார்ட்” என்கின்ற விதிமுறைப்படி கேப்டன் கோலி மற்றும் அந்த போட்டியில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீத தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

IND

மேலும் இந்திய அணியின் கேப்டன் கோலியும் இந்த தவறை ஒப்புக் கொண்டு அவர்களின் இந்த முடிவிற்கு ஒப்புக்கொண்டதால் அபராத தொகையுடன் இந்த விடயம் முடிந்தது குறிப்பிடத்தக்கது.