தென்னாபிரிக்க தொடரை வென்று இமாலய சாதனை படைத்த இந்திய அணி – விவரம் இதோ

Ind
- Advertisement -

இந்தியா மற்றும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனே மைதானத்தில் இன்று முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 601 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய முதலில் அடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 275 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

Muthusamy 1

- Advertisement -

பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தென்ஆப்பிரிக்காவை ஃபாலோ ஆன் கொடுக்க
நான்காம் நாளான இன்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென்ஆப்பிரிக்க அணி 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக கோலி தேர்வுசெய்யப்பட்டார்.

இந்த தொடர் வெற்றி மூலம் இந்திய அணி ஒரு இமாலய சாதனை படைத்துள்ளது. அது யாதெனில் இதுவரை இந்திய அணி 2012-13 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை தொடர்ந்து 11 டெஸ்ட் தொடர்களை இந்திய மண்ணில் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த 6 ஆண்டுகளாக இந்திய மண்ணில் நடைபெற்ற எந்த டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி தோல்வி அடையவே இல்லை என்பதே இதற்கான அர்த்தம்.

Umesh

எனவே இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்த இதுவரை முடியவில்லை மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தற்போது நடந்து வருவதால் இந்திய அணி ஒவ்வொரு தொடரிலும் இனி கவனமாக விளையாடும் என்றும் இந்திய அணி தற்போது பலமாக உள்ளது என்பதும் நாம் அறிந்ததே.

Advertisement