இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் என மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. இதில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12ம் தேதி அகமதாபாத் மைதானத்திலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 23ம் தேதி புனே மைதானத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தற்போது முதலில் நடைபெறயிருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுயிருக்கிறது. இரு அணிகளிலும் பல்வேறு மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்த இரு அணி வீரர்களும் தற்போது சென்னை வந்தடைந்து 6 நாட்கள் குவாரன்டையனில் இருக்கின்றனர். 2ம் தேதியில் இருந்து பயிற்சி தொடங்க உள்ளனர்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி தங்களது அணியில் புதிய மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய அணி பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சு மீது அதிக அளவில் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தொடரில் இந்திய அணி 5 பவுலர்களுடன் களம் இறங்குவார்கள் என்று உறுதியாக கூறப்படுகிறது.

இதில் 3 வேகப்பந்து வீச்சாளர்களையும், 2 சுழற்பந்து வீச்சாளர்களையும் களமிறக்க திட்டம். இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த ஐந்து பேரும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாட கூடியவராக தேர்வு செய்ய உள்ளார்கள். அதாவது இந்திய அணியில் மொத்தம் 10 வீரர்களும் சிறப்பாக பேட்டிங் செய்யும் வகையில் இந்திய அணியை உருவாக்க திட்டம் செய்திருக்கின்றனர்.
அப்படி பார்த்தால் இந்திய அணியில் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், சிராஜ், பும்ரா, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம் பெற வாய்ப்பிருக்கிறது. இதில் வாசிங்டன் சுந்தர் பதிலாக அக்சர் பட்டேல் களமிறக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் அக்சர் பட்டேலும் சிறந்த பவுலர் மற்றும் பேட்ஸ்மன் தான். எனவே இங்கிலாந்து தொடரில் இந்திய அணி பெரிய மாற்றத்துடன் களமிறங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை துவங்கவுள்ள இந்த போட்டியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.



