ஐ.பி.எல் மட்டுமல்ல துபாயில் இந்திய அணிக்கு மற்றொரு தொடரும் நடக்க வாய்ப்பு – ரசிகர்கள் குஷி

Ind

நான்கு மாத பெரும் பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது ஐபிஎல் தொடர் நடப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் தொடர் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது அதன் பின்னர் கொரோனா தாக்கம் அதிகமாகி கொண்டே இருந்ததால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

Ipl cup

இந்த தருணத்தில் வைரசின் தாக்கம் குறைவாக இருந்த ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து, இலங்கை போன்ற நாடுகளில் தொடரை நடத்தி தருவதாக பிசிசிஐக்கு அழைப்பு விடுத்தது. மேலும் ஐபிஎல் தொடரை நடத்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தை தேர்ந்தெடுக்க பிசிசிஐ முடிவு செய்திருந்தது.

ஆனால் அந்த காலகட்டத்தில் டி20 உலக கோப்பை தொடர் நடக்க இருப்பதாக திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று ஐசிசி அந்த உலகக் கோப்பை தொடரை அடுத்த வருடத்திற்கு தள்ளி வைத்தது இதன் காரணமாக இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி விடலாம் என பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படெல் கூறுகையில்… முழு ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வாய்ப்பு இருக்கிறது மொத்தம் 60 போட்டிகளையும் அங்கு நடத்திவிடலாம் என்று தான் யோசித்து முடிவுசெய்துள்ளோம். இத்தொடர் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 7 வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். அங்கு நடத்தினால் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்தி முடிக்கமுடியும்.

- Advertisement -

IPLNSG

எங்கு நடக்கும் ? எப்போது நடக்கும் ? வீரர்களை எப்படி பாதுகாப்பது ? போட்டிகளுக்கான அட்டவணை என்பது குறித்த இன்னும் தெளிவான தகவல்கள் 7 நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று கூறியுள்ளார் பிரிஜேஷ் படெல். இதன்மூலம் இந்த ஆண்டு நடைபெறாது என்று நினைத்திருந்த ஐ.பி.எல் தொடர் நிச்சயம் நடக்கும் என்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த தொடர் முடிவடைந்ததும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா தொடரும் துபாயில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் ஐபிஎல் போட்டிகள் 44 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளதால் ஸ்டார் குழுமத்திற்கு வருவாய் பாதிக்கப்பட உள்ளதன் காரணமாக இந்த தொடரை நடத்துவதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்து பேசிய பெயர் குறிப்பிடாத பிசிசிஐ அதிகாரி கூறுகையில் :

IndvsRsa

என்னைப்பொறுத்தவரை நிச்சயம் இந்த தொடர் நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் அதற்கான சாத்தியங்கள் கிடையாது என்றும் கூறியுள்ளார். ஏனெனில் ஐபிஎல் தொடரை அடுத்து ஆஸ்திரேலிய தொடர் இருப்பதால் அதற்காக இந்திய அணி வீரர்கள் தயாராகும் வகையில் ஓய்வு தேவை என்பதால் இந்த தொடர் நடைபெற வாய்ப்பில்லை என்று தெரிகிறது. இருந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை எதுவும் உறுதியாக சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.