இலங்கை அணிக்கு எதிரான டி20 இந்திய அணி அறிவிப்பு – வீரர்களின் முழுப்பட்டியல் இதோ

Ind

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டியில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

Cup

ஜனவரி 5 ஆம் தேதி துவங்கும் இந்த தொடரின் முதல் போட்டி கௌஹாத்தி மைதானத்திலும், இரண்டாம் டி20 போட்டி 7 ஆம் தேதி இந்தூர் மைதானத்திலும், மூன்றாவது டி20 போட்டி 10 ஆம் தேதி புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இந்திய அணிக்கு கேப்டனாக கோலி இந்த வருடத்தின் முதல் தொடரில் பங்கேற்க உள்ளார். துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப் பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த பும்ரா மற்றும் தவான் ஆகியோர் இணைந்துள்ளனர். மற்றபடி புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. க்ருனால் பாண்டியாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, சுந்தர் அணியில் தொடர்கிறார் மேலும் தாகூர் மற்றும் சைனி ஆகியோர் இந்திய அணியில் தொடர்கின்றனர். இந்த டி20 தொடரிலும் சஞ்சு சாம்சன் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -