மீண்டும் தோனி இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – வீரர்களின் விவரம் இதோ

dhoni

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று 2 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிராக டி20 போட்டியில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

Cup

ஜனவரி 5 ஆம் தேதி துவங்கும் இந்த தொடரின் முதல் போட்டி கௌஹாத்தி மைதானத்திலும், இரண்டாம் டி20 போட்டி 7 ஆம் தேதி இந்தூர் மைதானத்திலும், மூன்றாவது டி20 போட்டி 10 ஆம் தேதி புனே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இந்தியா சுற்றுப்பயணம் வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரிலும் கோலி கேப்டனாக தொடர்கிறார். இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள ரோஹித் மற்றும் ஷமி மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தோனிக்கு இந்த தொடரிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

Dhoni-1

2020 ஆம் ஆண்டின் முதல் ஒருநாள் தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி மீண்டும் இந்திய அணியில் இணைவார் என்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலதரப்பினரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மீண்டும் தோனிக்கு அணியில் இடமில்லை என்பதனை அறிந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் ஏற்கனவே பல மாதங்களாக அணியில் இடம்பெறாமல் இருக்கும் தோனி இனி அணியில் இணைவது சற்று கடினம் என்றே கூறப்படுகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த தொடர் இந்திய அணிக்கு முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த தொடருக்கு அடுத்து இந்திய அணி ஒரு நீண்ட தொடராக நியூசிலாந்துக்கு செல்ல இருப்பதால் இந்திய அணி வெற்றிபெற்று நல்ல உத்வேகத்துடன் செல்ல வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பு. புதிய வருடம் இந்திய அணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.