ராகுல் டிராவிட் தலைமையில் விராட் கோலி விளையாட போகிறார், எப்போது தெரியுமா ?

dravid
- Advertisement -

இந்திய ஏ அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் மோதும் 4 நாட்களை கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூலை மாதம் 17 ஆ தேதி தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் விராட் கோலி விளையாட வாய்ப்பிருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஒரு வேலை அது நடந்தால் இந்திய ஏ அணியில் பயிற்சியாளராக உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தலைமையில் கோலி விளையாடும் வாய்ப்பு அமையும்.

kholi

- Advertisement -

அடுத்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி 2 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இந்திய அணி ஐயர்லாந்து செல்கிறது. இந்த போட்டிக்கான அணி வீரர்கள் பட்டியலை பி.சி.சி.ஐ ஏற்கனவே வெளியோட்டிருந்தது. அந்த அணியின் கேப்டனாக கோலி செயல்படவுள்ளார்,

ஆனால் அந்த போட்டி நடக்கும் அதே தேதியில் இங்கிலாந்து கவுண்டி போட்டிகளும் கோலி ஆடவிருக்கிறார். இதனால் சொந்த நாட்டின் போட்டிகளுக்காக கவுண்டி தொடரில் இருந்து கோலி ஐயர்லாந்தில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

dravid

தற்போது இருக்கும் நிலவரப்படி பார்த்தல் இங்கிலாந்தில் நடந்துவரும் கவுண்டி போட்டிகளில் விராட் கோலி லண்டன் ராயல் கோப்பை போட்டிகளில் 3 ஒரு நாள் போட்டிகளிலும், அதனை தொடர்ந்து 2 கவுண்டி போட்டிகளிலும் விளையாட உள்ளார். இந்நிலையில் இந்தியா ஏ அணி விளையாடும் இங்கிலாந்து லயன்சுடனான 4 நாள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது என்று இந்தியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது .

Advertisement