ஓவல் டெஸ்ட் : கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள் – காரணம் என்ன தெரியுமா ?

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 2-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் அஸ்வின் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் இன்றைய போட்டியிலும் சேர்க்கப்படாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

rahane

அதனை தொடர்ந்து இந்திய வீரர்கள் தங்களது தேசிய கீதத்தை பாடும் போது கையில் கருப்பு நிற பட்டையை அணிந்திருந்தது ரசிகர்களிடையே பெரிய கேள்வியை எழுப்பியது. ஏனெனில் எப்போதுமே ஏதாவது ஒரு துக்கத்தை அனுசரிக்கும் வகையில் தான் வீரர்கள் இது போன்ற கருப்பு நிற பட்டையை கையில் அணிந்து விளையாடுவது வழக்கம்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் மற்றும் கோச் வாசுதேவ் பரஞ்செபி (82) வயது அவரது மறைவிற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் இந்திய வீரர்கள் அனைவரும் இன்றைய போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளது.

அதன்படி மறைந்த மும்பை கோச் வாசுதேவ் பரஞ்செபி மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்திய வீரர்கள் இன்று கருப்பு பட்டை அணிந்து விளையாடுகின்றனர் என தங்களது ட்விட்டர் பக்கத்திலும் அந்த செய்தியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வரும் வேளையில் பிசிசிஐ செய்த இந்த கவுரவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement