டி20 உலககோப்பையை வென்ற இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – என்ன நடந்தது?

IND
- Advertisement -

பார்படாஸ் நகரில் ஜூன் 29-ஆம் தேதி நடைபெற்ற நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் மோதின. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை வென்றது.

கடந்த 2007-ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது. அடுத்து பல ஆண்டு காலமாக கோப்பையை தவற விட்டு வந்த இந்திய அணி தற்போது 17 ஆண்டுகள் கழித்து இந்த தொடரில் அந்த கோப்பையை வென்று இரண்டாவது முறையாக டி20 சாம்பியனாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்த போட்டி முடிந்து வெற்றியை வெகு விமர்சையாக கொண்டாடிய இந்திய வீரர்கள் தற்போது நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் நாடு திரும்பும் வேளையில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியமும், ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.

இவ்வேளையில் இப்படி இந்திய அணியின் வீரர்கள் தாயகம் திரும்புவதில் ஏற்பட்டுள்ள தாமதம் அனைவருக்கும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் யாதெனில் : கரீபியன் தீவுகளில் தற்போது பெரில் என்கிற புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன் காரணமாக பார்படாஸ் நகரின் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

- Advertisement -

அதோடு அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்போது இந்திய வீரர்கள் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் நிலைமை சரியாகும் பட்சத்தில் இந்திய அணி அங்கிருந்து நேரடியாக நியூயார்க் சென்றடையும்.

இதையும் படிங்க : குஷனை நகர்த்தி ஏமாத்தீட்டாங்க.. சூரியகுமார் பிடிச்சது கேட்ச் இல்ல.. பாக் ரசிகர்கள் விமர்சனத்துக்கு பொல்லாக் பதில்

அதன் பின்னர் நியூயார்க் நகரில் இருந்து துபாய் வந்தடைந்து துபாயில் இருந்து இந்தியாவிற்கு இந்திய வீரர்கள் வர இருக்கின்றனர். அவர்களுக்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலும் புயல் எச்சரிக்கை காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் தற்போது அவர்கள் நாடு விரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement