ஐபிஎல் பழியையும் அவங்க மேல போடாதீங்க – ரோஹித் சர்மா மற்றும் இந்திய வீரர்களை விளாசும் மதன் லால்

Madan Lal
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்த இந்தியா 0 – 2* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது. இத்தனைக்கும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்ட இந்திய அணி அந்த 2 போட்டிகளிலுமே ஒரு கட்டத்தில் கையில் வைத்திருந்த வெற்றியை வங்கதேசத்தின் மெஹதி ஹசன் போன்ற டெயில் எண்டர்களிடம் சுமாராக பந்து வீசி கோட்டை விட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

Deepak Chahar 1

- Advertisement -

வரும் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் இப்படி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா நிச்சயம் கோப்பையை வெல்லப் போவதில்லை என்ற கவலை இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக இந்த தொடரில் அறிமுகமாக களமிறங்கிய குல்தீப் சென் முதல் போட்டியுடன் காயமடைந்து வெளியேறிய நிலையில் 2022 ஐபிஎல் தொடருக்கு முன்பாக காயமடைந்து பின்னர் குணமடைந்து பின்னர் காயமடைந்து பின்னர் மீண்டும் குணமடைந்த தீபக் சஹர் ஓரிரு போட்டிகளில் விளையாடிய நிலையில் மீண்டும் காயமடைந்து வெளியேறியுள்ளார்.

பழியை போடாதீங்க:

அவர்களுடன் கேப்டன் ரோகித் சர்மாவும் காயமடைந்து வெளியேறியுள்ள நிலையில் பும்ரா, ஜடேஜா போன்ற முக்கிய வீரர்களும் சமீப காலங்களில் அடிக்கடி காயமடைந்து வெளியேறுவது வழக்கமாகி வருகிறது. பொதுவாக காயமடைந்த வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று 100% முழுமையாக குணமடைந்து விட்டார் என்று சான்றிதழ் பெற்ற பின்பு தான் இந்தியாவுக்காக விளையாட முடியும். ஆனால் சமீப காலங்களில் முக்கிய தொடர்களில் விளையாட வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக முழுமையாக குணமடையாமலேயே சான்றிதழை வாங்கிக் கொண்டு மீண்டும் விளையாட வரும் காரணத்தாலேயே முக்கிய வீரர்கள் மீண்டும் காயமடைவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

Rohit-Sharma

அதை 2வது போட்டிக்கு பின் கண்டித்த ரோஹித் சர்மா தாம் உட்பட யாராக இருந்தாலும் 100% குணமடைந்த பின்னரே இந்திய அணிக்கு விளையாட அனுமதிக்க வேண்டுமென்று என்சிஏ’வை விமர்சித்தார். இந்நிலையில் இதன் வழியை என்சிஏ மீது மட்டும் போட முடியாது என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் மதன் லால் அங்கிருந்து குணமடைந்து வரும் வீரர்கள் உடனடியாக ஐபிஎல் தொடரில் விளையாடுவதும் முக்கிய காரணமாகிறது என்று விமர்சித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது மோசமான ஒன்றாகும். உங்களது கேப்டனே இப்படி புகார் கொடுக்கிறார் என்றால் நிச்சயமாக ஏதோ ஒரு இடத்தில் தவறு நடக்கிறது. இருப்பினும் இதற்கான பொறுப்பை யார் ஏற்பார்கள்? ஏன் முழுமையாக குணமடையாத போதிலும் வீரர்கள் இந்தியாவுக்கு விளையாட வருகிறார்கள்? நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடுகிறீர்கள் அதற்கான முடிவும் உங்கள் முன்னே இருக்கிறது. அதனால் நீங்கள் (இந்திய வீரர்கள்) ஓய்வெடுக்க விரும்பினால் ஐபிஎல் தொடரின் போது ஓய்வெடுங்கள். ஏனெனில் நீங்கள் நாட்டுக்கு தான் முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். மேலும் நீங்கள் ஐசிசி உலகக் கோப்பைகளை வெல்லாவிட்டால் உங்களுடைய நாட்டின் கிரிக்கெட் வீழ்ச்சியை நோக்கி சென்று விடும்” என்று கூறினார்.

Madan-Lal

அதாவது காயமடைந்து தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லும் நட்சத்திர வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக குணமடைந்து வருவதே மீண்டும் காயத்தை சந்திப்பதற்கு முக்கிய காரணமென்று மதன் லால் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இப்போதெல்லாம் கேப்டன் ரோகித் சர்மா உட்பட நிறைய வீரர்கள் ஐபிஎல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் விளையாடும் நிலையில் நாட்டுக்காக ஓய்வு எடுப்பதும் காயங்களுக்கு முக்கிய காரணமாக அமைவதாக அவர் தெரிவிக்கிறார்.

- Advertisement -

ஏனெனில் தொடர்ச்சியாக விளையாடினால் தான் ஃபார்ம் மற்றும் காயங்களை கடந்து சிறப்பாக செயல்பட முடியும்.மாறாக ஒரு தொடரில் விளையாடி மற்றொரு தொடரில் ஓய்வெடுத்து அதற்கடுத்த தொடரில் விளையாடும் போது நிச்சயமாக உடல் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்காமல் காயங்களை சந்திக்க வித்திடுகிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் கிரிக்கெட்டில் ரசிகர்கள் அறிந்திறாத 5 ஸ்வாரஸ்ய சாதனைகள், விவரங்கள் – வித்யாச பதிவு

எனவே காயங்களுக்கான காரணமாக அமையும் ஐபிஎல் தொடரை மூடி மறைத்து விட்டு அதற்காக மொத்த பழியையும் என்சிஏ மீது போடாமல் நாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து விளையாடுமாறு ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய அணியினரை மதன் லால் விமர்சித்துள்ளார்.

Advertisement