ஒரு காலத்தில் 5000 ரன்கள் சர்வதேச ரன்கள் அடிப்பதே மிகப் பெரிய காரியமாக இருந்தது. அதன் பின்னர் விதிகள் தளர்த்தப்பட்டன .முதன்முதலில் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்கள் குவித்தார். அதன் பின்னர் ஒருநாள் போட்டிகளிலும் 10 ரன்கள் தொடர்ச்சியாக குவிக்கப்பட்டது. முதன்முதலில் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை குவித்தார். தற்போது ஒரு நாள் போட்டிகளில் 10,000 ரன்கள் குவித்துள்ளார் இந்திய வீரர்கள் பட்டியலைக் காண்போம்.

சச்சின் டெண்டுல்கர் – 18477 ரன்கள் :
முதன்முதலில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் குவித்த வீரர் இவர்தான். 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18,426 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரே போட்டியில் 200 ரன்கள் விளாசியுள்ளார். இவரது சராசரி 44.3 ஆகும்.

சௌரவ் கங்குலி – 11,363 ரன்கள் :
இவர்தான் இந்தியாவிற்காக அதிக ரன்கள் குவித்த இடதுகை ஆட்டக்காரர். கிட்டத்தட்ட சச்சின் டெண்டுல்கருக்கு முன்னதாகவே 11 ஆயிரம் ரன்களை குவித்தவர். அதன் பின்னர் இவரது கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11,363 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 183 ரன்களை அடித்துள்ளார் இவரது சராசரி 41.2 ஆகும் .

ராகுல் டிராவிட் – 10,889 ரன்கள்
டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே நன்றாக ஆடக்கூடிய வீரர் என்று பெயர் பெற்றவர். ஆனால் ஒருநாள் போட்டிகளில் பட்டையை கிளப்பியுள்ளார். 15 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடியவர் 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,289 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக 153 ரன்கள் எடுத்துள்ளார்.

மகேந்திர சிங் தோனி – 10773 ரன்கள் :
2004 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு வீரர் ஆவார். இந்தியாவிற்காக ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் குவித்த நான்காவது இந்திய வீரர். இவர் 10 ஆயிரம் ரன்கள் அடிக்க இவர் வெறும் 273 போட்டிகள் மட்டுமே எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மொத்தம் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10773 ரன்கள் குவித்துள்ளார். இதன் சராசரி 51.58 ஆகும்.

விராட் கோலி – 11867 ரன்கள் :
இவர்தான் இந்த பட்டியலிலேயே மிகச்சிறந்த வீரர். இவர் 10 ஆயிரம் ரன்கள் எடுக்க 205 ஆட்டங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார். சச்சின் டெண்டுல்கர் 259 ஆட்டங்கள் எடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் இந்தியாவிற்காக 10 ஆயிரம் ரன்கள் குவித்த ஐந்தாவது இந்திய வீரர் ஆவார். இவர் தற்போது வரை 248 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11687 ரன்கள் குவித்துள்ளார் இதன் சராசரி 59.34 ஆகும்.



