வெளியான இந்திய வீரர்களின் பெயர் மற்றும் எண் கொண்ட புதிய டெஸ்ட் ஜெர்ஸி – அட்டகாசமான புகைப்படம் இதோ

Oppo-1

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் நாளை 22ம் தேதி டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது.

jersy 2

jersy 1

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் உலக அளவில் துவங்கி உள்ளதால் அனைத்து டெஸ்ட் அணிகளும் தங்களது வெள்ளை நிற சீருடையில் பெயர் மற்றும் எண்களை பதிந்து விளையாடுகின்றன. இந்நிலையில் தற்போது இந்திய அணிக்கும் வெள்ளை நிறைவு சீருடையில் பெயர் மட்டும் எண் கொண்ட சீருடை தயாராகியுள்ளது.

இந்த புதிய சீருடை என இந்திய வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. கேப்டன் விராட் கோலி மற்றும் அஜின்கியா ரஹானே ஆகியோர் முதல் போட்டியில் கலந்து கொண்டனர். அதற்கடுத்து அனைத்து இந்திய வீரர்களும் புதிய ஜெர்ஸியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.