இந்திய அணியில் அதிகமுறை டக் ஆனவர்களை பற்றி தெரியுமா ? சச்சின் தான் முதலிடமாம் – முழு லிஸ்ட் இதோ

- Advertisement -

இந்தியா என்றால் பேட்டிங்கிற்கு பெயர் போன நாடாகத்தான் தற்போது வரை இருந்து வருகிறது. ஒவ்வொரு வீரரும் குறைந்தது நன்றாக ஆடும் பட்சத்தில் 5000 ரன்களாவது குவித்து விடுவார்கள்.அப்படி ரன்கள் குவித்தும் டக் அவுட் ஆகி அதிக இடத்தை பிடித்துள்ள இந்திய வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம்.

Raina

- Advertisement -

சுரேஷ் ரெய்னா- 14 டக் :

இந்தியாவின் இடதுகை ஆட்டக்காரரான இவர். அணியின் வீரர். 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். தற்போதுவரை 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 முறை டக் அடித்து வெளியேறியுள்ளார்.

Ganguly-1

சௌரவ் கங்குலி – 16 டக் :

- Advertisement -

இந்தியாவின் மிகச்சிறந்த ஸ்டைலான இடதுகை ஆட்டக்காரர் இவர் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற கேப்டன். இவர் மொத்தம் 297 ஒருநாள் போட்டிகளில் ஆடி 16 முறை முட்டை ரன்களில் ஆட்டமிழந்து உள்ளார்.

yuvraj

யுவராஜ் சிங் – 18 டக் :

- Advertisement -

இவரும் இடதுகை ஆட்டக்காரர். 2011 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடருக்கு 2007 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரிலும் இந்திய அணியில் வெல்வதற்கு மிகப்பெரிய காரணமாக இருந்தவர் அதிரடியாக ஆடுவதில் வல்லவர் 275 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 8601 ரன்கள் அடித்துள்ளார் மேலும் 18 முறை டக் அவுட் ஆகி உள்ளார்.

Srinath 1

ஜவகல் ஸ்ரீநாத் – 19 டக்

- Advertisement -

1990 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர். அவர் 229 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி உள்ளார். ஒரு அரை சதமும் அடித்துள்ளார் மேலும் 19 முறை டக் அவுட் ஆகி உள்ளார்.

Sachin

சச்சின் டெண்டுல்கர்- 20 டக் :

அனைத்து சாதனைகளையும் தற்போது வரை தன்னகத்தே வைத்துள்ளது போலவே இந்த சாதனையை இவர் தான் வைத்துள்ளார். இந்தியாவின் அதிக டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் இவர் தான் முதலிடத்தில். இருக்கிறார் 452 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18477 ரன்களை குவித்தது மட்டுமல்லாமல் 20 முறை டக் அவுட் ஆகி உள்ளார்.

Advertisement