18 வயதிற்குள் இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்களை பற்றி தெரியுமா ? – லிஸ்ட் இதோ

Washington
- Advertisement -

திறமை இருந்தால் எந்த வயதிலும் சர்வதேச அணியில் இடம் பிடிக்கலாம் என்பதற்கு நாம் கீழே பார்க்கப்போகும் வீரர்கள் எல்லாம் சாட்சி. இவர்களெல்லாம் 18 வயதிற்கு முன்னரே இந்திய அணியில் இடம் பிடித்தவர்கள்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் :

கிரிக்கெட்டின் கடவுளைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இவர் 1989ம் ஆண்டு தனது 16 வயதில் இந்திய அணிக்காக முதன்முதலில் ஆடினார். முதன்முதலாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் பெரிதாக ரன் ஏதும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Maninder

மனிந்தர் சிங் :

- Advertisement -

இவர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆவார் 1989-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தனது 17 வயதில் அறிமுகமானார். அதன் பின்னர் இந்திய அணிக்காக 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Harbhajan 3

ஹர்பஜன் சிங் :

- Advertisement -

ஹர்பஜன் சிங் இந்தியாவிற்காக அறிமுகமான போது இவருக்கு வயது வெறும் 17 தான். 1998 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமானார். அப்போது இவரது திறமை கங்குலியை கவர்ந்தது .அதன் பின்னர் கங்குலியின் தலைமையில் தான் இவர் அதிகபட்ச விக்கெட்டுகளை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 400 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Parthiv 2

பார்த்திவ் படேல் :

- Advertisement -

இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் இல்லாத காலகட்டத்தில் 17 வயதான பார்த்திவ் படேலை 2003 ஆம் ஆண்டு களம் இறங்கிவிட்டார்கள். அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்போதுதான் கிரிக்கெட் வரலாற்றின் ஜாம்பவானான மகேந்திர சிங் தோனி அவரது இடத்தைப் பிடித்து பெரும் சாதனைகள் படைத்தார்.

சேத்தன் சர்மா :

இவர் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 1983 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது 17 வயதிலேயே அறிமுகமானார். அந்த காலகட்டத்தில் இவரது பந்து வீச்சிற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்தார்கள்.

Advertisement