ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் ஆதரவாகவும் எதிராகவும் தங்களது கருத்தை சமூகவலைத்தளங்களில் பதிவுசெய்து வருகின்றனர்.அந்த வகையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்திற்கு ஆதரவாக சமூகவளைத்தளத்தில் பூம்ரா செய்துள்ள ஒரு டிவீட் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.தற்போது அந்த டிவீட்டை புலரும் ரீ டிவீட் செய்துவருகின்றனர்.
தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேமரூன் பேன்கிராப்ட் திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தியது வீடியோவில் அம்பலமானது.முதலில் மறுத்த அவர் பின்னர் சகவீரர்களின் தூண்டுதலின் பெயரில் தான் இந்த சம்பவம் நடந்தது எனக்கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதன் பின்னர் செய்த தவறை ஒப்புக்கொண்டு கேப்டன் மற்றும் துணைக்கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித்தும் வார்னரும் பதவி விலகினர்.
இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்திய பின்னர் ஐசிசி ஆஸ்திரேலிய அணி கேப்டனிற்கு 100% அபராதத்தையும் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்தது.பந்தை சேதப்படுத்திய பந்துவீச்சாளரான கேமரூன் பேன்கிராப்ட்க்கு 75% அபராதம் மட்டும் விதித்தது.
— Jasprit bumrah (@Jaspritbumrah93) March 29, 2018
இந்த பிரச்சனையை மிகவும் சீரியஸாக கவனத்தில் எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தற்போது ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னருக்கு சர்வதேச கிரிக்கெட் விளையாட
ஒரு வருட தடை விதித்தது.
இதன் பின்னர் ஐபிஎல்-இல் விளையாடவும் ஸ்மித்திற்கு தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் வார்னருக்கு ஆதரவாக பதிவிட்டிருந்த நிலையில் தற்போது இந்திய அணி வீரர் ஜஸ்பிரிட் பூம்ரா ஸ்மித்திற்கு ஆதரவாக சமூகவளைத்தளத்தில் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் பதிந்துள்ள டிவீட்டில் “ஒரு செய்த தவறை மட்டும் வைத்துக்கொண்டு அவர் செய்த பல நன்மைகளை மறந்துவிடுவது சரியல்ல” என்றுள்ளது.இந்த டிவீட் தற்போது சமூகவளைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.