இவங்க ரெண்டு பேரும் ஆடலனா இன்னைக்கு இந்தியா அவ்ளோதான். சிக்கலில் இந்திய அணி – விவரம் இதோ

Ind-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

Ind-vs-aus-1

- Advertisement -

இந்நிலையில் தொடரின் வெற்றியை முடிவுசெய்யும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பெங்களூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் தொடரை வெல்ல கடுமையான போட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த முறை ஆஸ்திரேலிய அணியிடம் தொடரை இழந்த இந்திய அணி இம்முறை பதிலடி கொடுக்க தயாராகி உள்ளது.

ஆனால் தற்போது இந்திய அணிக்கு ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது யாதெனில் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பேட்டிங் செய்தபோது அடிவயிற்றில் அடிவாங்கிய தவான் பீல்டிங் செய்ய வரவே இல்லை. அதேபோன்று பவுண்டரி லைனில் பந்தை தடுக்க சென்ற ரோஹித் தோள்பட்டை பகுதியில் கயமைடைந்து வெளியேறினார். அவரும் அதன்பிறகு பீல்டிங் செய்ய வரவில்லை.

dhawan 3

இவர்கள் இருவரின் காயம் சிறிதாக இருந்தாலும் அவர்களின் மருத்துவ அறிக்கைக்கு பிறகே இன்று விளையாடுவார்களா ? இல்லையா ? என்பது தெரியவரும். இந்திய அணியில் விராட் கோலிக்கு அடுத்து அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்றால் அது தவான் மற்றும் ரோஹித் ஆகியோர்தான் இவர்களைத் தவிர மற்ற அனைவரும் சில ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள்.

மேலும் பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக சிறப்பான துவக்கம் கொடுத்துவரும் இந்த ஜோடி இன்று களமிறங்காமல் போனால் போட்டியின் முடிவில் மாற்றம் ஏற்படலாம் என்பதால் தற்போது இந்திய அணிக்கு இந்த சிக்கலில் உள்ளது. ஆனால் காயத்தின் தன்மை அவ்வளவு பெரிதாக இல்லை என்றும் அவர்கள் இருவரும் இன்று களம் இறங்குவார்கள் என்றும் நம்பப்படுகிறது. பெங்களூரில் மதியம் 1.30 மணி அளவில் இறுதிப்போட்டி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement