நீங்க விளையாடுன வரைக்கும் போதும் கிளம்புங்க – இந்திய வீரரை கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்

Rahane-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் இந்த நான்காவது போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நான்காவது போட்டியின் ஆரம்பத்திலிருந்தே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

indvseng

- Advertisement -

ஆனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதன் காரணமாக முதல் இன்னிங்சில் 191 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தது. இதனால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதே வேளையில் துணை கேப்டனாக ரஹானேவின் மீது அதிகளவு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஏனெனில் இந்த தொடரில் மொத்தம் 7 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரஹானே கிட்டத்தட்ட 110-க்கும் குறைவான ரன்களே எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி முக்கியமான இந்த 4 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 14 ரன்களை மட்டுமே அடித்த ரகானே இரண்டாவது இன்னிங்சில் மீண்டும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளார்.

இதன் காரணமாக இந்திய ரசிகர்கள் அவரை விமர்சிக்க துவங்கியுள்ளனர். அதிலும் சில ரசிகர்கள் நன்றி ரஹானே என்று அவருக்கு விடைபெறும் நேரம் வந்துவிட்டதாக தங்களது கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்திய அணியில் ரஹானேவின் இடத்திற்கு இளம் வீரர்கள் பலர் காத்திருக்கின்றனர். அப்படி இருக்கையில் தொடர்ச்சியாக அவர் சொதப்பி வருவதால் நிச்சயம் அவர் அணியில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement