இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது பகல் இரவு ஆட்டமாக டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 180 ரன்கள் மட்டுமே குவித்தது.
மிட்சல் ஸ்டார்க்கை கிண்டல் செய்த ரசிகர்கள் :
அதன் பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 337 ரன்கள் குவித்து வலுவான முன்னிலை பெற்றனர். இதன் காரணமாக தற்போது இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கை ஓங்கியுள்ளது. அதேவேளையில் இந்திய அணி தோல்வியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் முதல் இன்னிங்சில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் சரிவிற்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். அதேபோன்று இரண்டாவது இன்னிங்ஸிலும் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் இரண்டு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார்.
இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து இந்திய அணியை மிரட்டி வரும் மிட்சல் ஸ்டார்க் கடந்த ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 24.75 கோடிக்கு விலை போன வேளையில் இம்முறை 11 கோடி வரை தான் சென்றுள்ளார்.
இதனை வைத்து கிண்டல் செய்த இந்திய ரசிகர்கள் ஸ்டார்க் பவுண்டரி லைனில் நிற்கும் போது உங்களுடைய ஐபிஎல் தொகை ஏன் குறைக்கப்பட்டுள்ளது? உங்களுக்கு பிடித்த ஐபிஎல் அணி எது? என்ற கேள்வியையும் எழுப்பினர். அதேபோன்று கே.கே.ஆர், கே.கே.ஆர் என ரசிகர்கள் கோஷமிட்டனர். ஆனால் ஸ்டார்க் எவ்வித கவன சிதறளும் இல்லாமல் அதனை சமாளித்தார்.
இதையும் படிங்க : இது ஒன்னு போதும்.. இனிமே வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் நிதீஷ் ரெட்டி விளையாடுவது கன்பார்ம் – விவரம் இதோ
ஏற்கனவே பெர்த் நகரில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றிருந்த வேளையில் தற்போது அடிலெய்டில் நடைபெற்று வரும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் இந்த தொடரானது (1-1) ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலைக்கு வரும்.



