கபில் சார் நீங்க சொன்னது 100% கரெக்ட். அவர் நிச்சயம் இந்திய டெஸ்ட் அணியில் சேர்த்திருக்க வேண்டும் – ரசிகர்கள் கொதிப்பு

Kapil-Dev
- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வாஷ் அவுட் ஆகியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும் படுதோல்வி அடைந்தது. இந்த தொடர் தோல்விகளால் பல்வேறு விமர்சனங்களை இந்திய அணி பெற்று வருகிறது.

Ind-lose

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 மற்றும் ஒருநாள் என இரு தொடர்களிலும் இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்திற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் இளம் வீரரான ராகுல். இந்த இரு தொடர்களிலும் விக்கெட் கீப்பிங் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்தினார். டி20 போட்டிகளை தொடர்ந்து ஒருநாள் போட்டியிலும் அசத்தியவர் ஒரு சதமும் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் கடந்த பல தொடர்களாக தனது சிறப்பான உச்சகட்ட பார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்திய அணியின் முதல் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு பேட்டியளித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில்தேவ் கூறுகையில் : இந்திய அணியின் இந்த தொடர் தோல்விகளுக்கு அணியின் தேர்வு சரியாக அமையாததே காரணம் என்று கூறியிருந்தார். மேலும் ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு வீரர்களை தேர்வு குழு நம்பியுள்ளது. அதனாலே இந்திய அணி இதுபோன்ற இன்னல்களை சந்தித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Rahul

மேலும் ராகுலை நிச்சயம் டெஸ்ட் அணியில் தேர்வு செய்திருக்க வேண்டும் என்றும் அதுவே சரியாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு ரசிகர்களும் தற்போது தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் ராகுல் தற்போது தனது சிறப்பான உச்சகட்ட பார்மில் இருக்கிறார் அவரது அசத்தலான ஆட்டம் நியூஸிலாந்திலும் வெளிப்பட்டதால் அவரை டெஸ்ட் அணியில் நிச்சயம் சேர்த்திருக்க வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். கடந்த கால டெஸ்ட் பார்ம் அவுட்டை மனதில் வைத்துக்கொண்டு தற்போது சிறப்பான பார்மில் இருக்கும் அவரை சேர்க்காதது தவறு என்றும் கூறிவருகின்றனர்.

Advertisement