போட்டி நடவிக்கவில்லை என்றாலும் மனதை நெகிழவைத்த இந்திய ரசிகர்களின் செயல் – பி.சி.சி.ஐ வெளியிட்ட வீடியோ

- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று கௌஹாத்தி மைதானத்தில் நடைபெற இருந்தது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் டாஸ் போடப்பட்டது. டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.#

ind vs sl

அதன்படி இலங்கை அணி களமிறங்க தயாராகியது. ஆனால் அப்போது திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. மழை மேலும் அதிகரித்த காரணத்தினால் போட்டி நடைபெற சாத்தியம் இல்லை என்று தெரியவரவே ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி. கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் மீதமுள்ள இரு போட்டிகளில் வென்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலைமை இப்போது இரு அணிகளுக்கும் வந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று போட்டி மழையினால் பாதிக்கப்பட்ட பிறகு ஓவர்கள் குறைத்து போட்டி நடைபெறும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். மைதான ஊழியர்கள் மைதானத்தில் இருந்த நீரை அகற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அகற்றியும் மைதானம் ஈரமாக இருந்தது. இதனை அடுத்து வேக்கம் க்ளீனர் வைத்து சில இடங்கள் காய வைக்கப்பட்டு வந்தது. ஆனால் அதிலும் பயன் கிடைக்கவில்லை. அடுத்தது தலை முடியை காய வைக்கும் ஹேர் டிரையர், அயன் பாக்ஸ் போன்றவற்றை எடுத்து வந்து ஆடுகளத்தை காய வைக்க முயற்சி செய்தனர் இதனால் ரசிகர்கள் கேலியும் செய்தனர்.

ஆனால் நேற்றைய போட்டி நடைபெறாமல் இருந்த போதிலும் ரசிகர்களின் செயல் மைதானத்தை அதிரவைத்தது. அதன்படி போட்டி துவங்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் போட்டிக்காக நடைபெறாது என்று காத்திருந்த போதிலும் வந்தேமாதரம் பாடலை பாடி நெகிழவைத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பி.சி.சி.ஐ யின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியது. இந்திய ரசிகர்களின் இந்த செயல் ரசிகர்களை கவர்ந்து வருவது மட்டுமின்றி உணர்ச்சிகராமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement