- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியில் இந்த குறை ரொம்ப அதிகமாவே இருக்கு.. ப்ளீஸ் ருதுராஜை அணிக்குள் கொண்டுவாங்க – ரசிகர்கள் கோரிக்கை

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தற்போது இந்திய அணியானது (0-1) என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தொடரில் முதலாவதாக நடைபெற்ற போட்டியில் எளிதாக வெற்றி பெற வேண்டிய போட்டியை கோட்டை விட்ட இந்திய அணியானது அந்த போட்டியை சமனில் முடித்தது. அதற்கு அடுத்து கொழும்புவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் :

241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 42.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்களை மட்டுமே குவித்ததால் இலங்கையை 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் தற்போது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

அதன் காரணமாக கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி இந்த தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலை ஏற்றுபட்டுள்ளது. ஒருவேளை இலங்கை அணி கடைசி போட்டியில்வெற்றி பெறும் பட்சத்தில் இந்து தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடரின் போது இந்திய அணியின் வீரர்களான ரோகித் சர்மா, அக்சர் படேல் ஆகியோரை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனாலும் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. கொழும்பு மைதானத்தில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகம் அதிகமாக இருக்கும் வேளையில் இந்திய அணியின் வீரர்கள் மிகவும் தடுமாறி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய ரசிகர்கள் ருதுராஜ் கெய்க்வாட்டை இந்திய அணிக்குள் கொண்டு வரவேண்டும் என்று கூறி வருகின்றனர். அதற்கு காரணம் யாதெனில் கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இந்திய அணிக்காக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரோஹித் தவிர யாருமில்லையா? 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஜெயிக்க ஸ்ரேயாஸ், ராகுலை கழற்றி விடுங்க.. பசித் அலி

அதிலும் குறிப்பாக ஸ்பின்னர்கள் பந்துவீச வரும்போது அவர்களுக்கு எதிராக மேலே ஏறி வந்து அடிப்பது, எத்தனை பீல்டர்களை நிற்க வைத்தாலும் அவர்களுக்கு இடையில் பவுண்டரி அடிப்பது என பல்வேறு திறமைகளை வைத்துள்ளார் எனவே நிச்சயம் அவரை இந்திய அணிக்குள் கொண்டு வந்து தொடர் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் ருதுராஜ் கெய்க்வாட் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய தகுதி உடையவர் என்றும் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -