அடுத்த உலகக்கோப்பையும் வேஸ்ட்டா போச்சா. இப்படியே இருந்தா இந்தியா வெளங்கிடும் – ரசிகர்கள் பாய்ச்சல்

Ravi-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை ரவி சாஸ்திரி இந்திய அணி பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

ravi koli 2

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் தேர்வில் ரவி சாஸ்திரி தேர்வானத்துக்கு இந்திய ரசிகர்கள் வெளிப்படையாக தங்களது அதிருப்தியினை தெரிவித்து உள்ளனர். சமூகவலைதளங்களில் இந்திய ரசிகர்கள் விமர்சித்ததாவது : எதற்கு இப்படி விண்ணப்பங்களை பெற்று நேர்காணல் செய்வதைப் போல நாடகம் நடத்த வேண்டும் நேரடியாக ரவிசாஸ்திரி தேர்வு செய்ய வேண்டியது தானே என்று சில ரசிகர்கள் கூறியுள்ளனர்.

மேலும் சில ரசிகர்கள் ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வெற்றி பெறவில்லை. அதனால் அடுத்த டி20 உலகக் கோப்பையும் நாம் மறந்து விட வேண்டியதுதான் என்று நெட்டிசன்கள் இப்போதே ஆருடம் கூறுகின்றனர். மேலும் டி20 உலகக் கோப்பையை மறந்துவிடுங்கள் அதற்கு பிறகு வரும் 50 ஓவர் உலக கோப்பையை பார்த்துக் கொள்ளலாம் என்று கிண்டல் செய்துள்ளனர்.

Rohith-1

அதுமட்டுமில்லாது ரவிசாஸ்திரி கோலிக்கு மட்டுமே சப்போர்ட் செய்வார். இனிமேல் கோலி மற்றும் ரோஹித் மோதல் தொடர்ந்து நடக்கும் என்றும் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து இந்திய ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ஆதங்கமாக பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement