நீங்கல்லாம் பேடிஎம் கோப்பை வெல்லத்தான் லாய்க்கி – கலாய்த்த இங்கிலாந்துக்கு இந்திய ரசிகர்கள் மாஸ் பதிலடி, நடந்தது என்ன

ENg vs IND
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வரலாற்றின் 8வது ஐசிசி டி20 உலக கோப்பையை வென்ற ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து தொடர்ந்து அங்கேயே இருந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ஆனால் பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவிடம் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே தொடரை இழந்த இங்கிலாந்து நவம்பர் 22ஆம் தேதியன்று நடைபெற்ற சம்பிரதாய 3வது போட்டியில் ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 221 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாக சாதனை படைத்த ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பைக்கு முன்பாக நடந்த டி20 தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

அதை விட 3 – 0 (3) என்ற கணக்கில் இந்த ஒருநாள் தொடரில் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து 2011க்குப்பின் 11 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு வைட்வாஷ் தோல்வியை சந்தித்து தலை குனிந்துள்ளது. முன்னதாக 2019 உலக கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக திகழும் இங்கிலாந்து தற்போது டி20 உலக கோப்பையையும் வென்று வரலாற்றில் ஒரே நேரத்தில் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பைகளை வென்ற முதல் அணி என்ற உலக சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் பதிலடி:
கிரிக்கெட்டை கண்டுபிடித்தாலும் நூற்றாண்டுகளுக்கு மேலாக ரொம்பவே தடுமாறிய அந்த அணி இயன் மோர்கன் வருகைக்கு பின் கடந்த 2017 முதல் அதிரடியாக விளையாடும் அணுகு முறையை பின்பற்றி அதிரடிப்படையாக மாறி அடுத்தடுத்த உலக கோப்பைகளை வென்றுள்ளது. அதனால் உலகிலேயே தற்சமயத்தில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறந்த அணியாக திகழும் இங்கிலாந்தை ஐபிஎல் தொடரை நடத்தியும் 2013க்குப்பின் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் திணறும் இந்தியா வெட்டி வீராப்பை தூக்கி எறிந்து விட்டு பின்பற்ற வேண்டுமென முன்னாள் கேப்டன்கள் மைக்கேல் வாகன், நாசர் ஹுசைன் ஆகியோர் செமி ஃபைனலில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாமல் தோற்றப்பின் வெளிப்படையாக விமர்சித்தனர்.

அந்த வகையில் சிறந்த வெள்ளைப் பந்து அணி என்று தங்களை தாங்களே தம்பட்டம் அடிக்கும் இங்கிலாந்து அதே சாம்பியன் வீரர்களை கொண்டிருந்தும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் 11 வருடங்கள் கழித்து ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்ததை பார்த்த இந்திய ரசிகர்கள் “என்னடா இது வரலாற்றின் சிறந்த வெள்ளை பந்து அணிக்கு வந்த சோதனை” என்று சமூக வலைதளங்களில் கலாய்த்தார்கள். அத்துடன் சமீப காலங்களில் சிறப்பாக செயல்படுவதற்காக இந்திய கிரிக்கெட் வரலாற்றை தரம் தாழ்த்தி எப்படி செயல்பட வேண்டுமென்று அறிவுரை வழங்காமல் உங்களது கிரிக்கெட்டை மட்டும் பார்க்குமாறு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்தார்கள்.

- Advertisement -

1. அப்படி புயலாக கிளம்பி சமூக வலைதளங்களில் இங்கிலாந்தை கலாய்த்து தள்ளிய இந்திய ரசிகர்களால் கடுப்பான அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ரசிகர்கள் பக்கமான பார்மி ஆர்மி தனது ட்விட்டரில் “நாங்கள் எப்போதும் பெரிய ஐசிசி கோப்பைகளை தான் வெல்வோம். பேடிம் போன்ற இருதரப்பு தொடர்களை வெல்ல மாட்டோம்” என்று சமீப காலங்களில் இருதரப்பு தொடர்களில் அசத்தினாலும் ஐசிசி தொடர்களில் சொதப்பும் இந்தியாவை மோசமாக கிண்டலடித்தது.

2. ஆனால் 1880களில் கிரிக்கெட்டை கண்டுபிடித்து 200 வருடங்களில் நீங்கள் வென்ற 3 கோப்பைகளுக்கு (2010, 2019, 2022*) நிகராக எங்கள் கேப்டன் தோனி மட்டுமே அசால்டாக வெறும் 10 வருடத்திற்குள் (2007, 2011, 2013) இந்தியாவுக்கு வென்று கொடுத்ததாக இந்திய ரசிகர்கள் மாஸ் பதிலடி கொடுக்கிறார்கள்.

3. அதை விட நியூசிலாந்தை ஏமாற்றி 2019 உலக கோப்பை வென்றதைப் போல் எப்போதும் நாங்கள் ஏமாற்றி வென்றதில்லை என்று தெரிவிக்கும் இந்திய ரசிகர்கள் அதையும் இயன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ் போன்ற வெளிநாட்டு வீரர்களை வைத்து வாங்கியவர்கள் தானே நீங்கள் என தக்க பதிலடி கொடுக்கிறார்கள். அத்துடன் அன்றும் என்றும் இந்திய ரத்தத்தை கொண்ட வீரர்களை வைத்து தான் நாங்கள் உலக கோப்பை முதல் உள்ளூர் கோப்பை வரை வென்று வருவதாக இந்திய ரசிகர்கள் மாஸ் காட்டுகிறார்கள்.

4. அது போக 1983லேயே உங்களது மண்ணில் முரட்டுத்தனமான வெஸ்ட் இண்டீஸ் சாய்த்து அந்த காலத்திலேயே கோப்பை வென்ற நாங்கள் 2013இல் உங்களையே உங்களது சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்து சாம்பியன்ஸ் டிராபியை வென்றதாகவும் இந்திய ரசிகர்கள் இங்கிலாந்துக்கு சரமாரியான பதிலடிகளை கொடுத்து வருகிறார்கள்.

Advertisement