நல்லவேள பாகிஸ்தான் ஜெயிச்சுது, நிம்மதியுடன் இங்கிலாந்து போட்டியை பார்க்கும் இந்திய ரசிகர்கள் – காரணம் என்ன

Dhoni-2
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2009க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் தோற்றது. அதனால் கதை முடிந்ததாக கருதப்பட்டு கிண்டல்களுக்கு உள்ளான அந்த அணி அதற்கடுத்த 2 போட்டியில் வென்ற நிலையில் கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம் தோற்று தென் ஆப்பிரிக்கா வெளியேறியதால் அதிர்ஷ்டத்துடன் அரை இறுதிக்குள் நுழைந்து ஆச்சரியப்படுத்தியது. அந்த நிலையில் நவம்பர் 9ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் அரை இறுதிப் போட்டியில் வலுவான நியூசிலாந்தை 7 விக்கெட் தேசத்தில் அசால்டாக தோற்கடித்த பாகிஸ்தான் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற சாதனை படைத்துள்ளது.

Babar Azam Moahmmed Rizwan Pak vs NZ

- Advertisement -

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 152/4 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஃபின் ஆலன் 4, டேவோன் கான்வே 21, கிளன் பிலிப்ஸ் 6 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 46 (42) ரன்களும் டார்ல் மிட்சேல் அதிகபட்சமாக 3 பவுண்டரி 1 சிக்சருடன் 53* (35) ரன்களும் குவித்தனர்.

நல்லவேள ஜெயிச்சுட்டீங்க:

அந்தளவுக்கு ஃபீல்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிடி 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 153 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு சமீப காலங்களில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து சுமாரான ஃபார்மில் தவிக்கும் கேப்டன் பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் ஜோடி இந்த முக்கிய போட்டியில் அற்புதமாக செயல்பட்டு 105 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தனர். அதில் முகமது ரிஸ்வான் 57 ரன்களும் பாபர் அசாம் 53 ரன்களும் எடுத்து அவுட்டாக இறுதியில் முஹம்மது ஹாரிஸ் 30 (26) ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார்.

Pak vs BAn

இப்படி கடைசி நேரத்தில் கொதித்தெழுந்து பைனலுக்கு முன்னேறியுள்ள பாகிஸ்தான் 1992 போல கோப்பையை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. மறுபடியும் இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தடுமாறிய நியூசிலாந்து பரிதாபமாக வெளியேறியது நிறைய இந்திய ரசிகர்களுக்கே சோகத்தை கொடுத்துள்ளது. ஆனால் நிதர்சனத்தை அறியும் இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானின் வெற்றியால் நிம்மதியடைந்துள்ளனர்.

- Advertisement -

1. ஏனெனில் அனைத்து விதமான ஐசிசி உலகக் கோப்பைகளையும் சேர்த்து அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக வரலாற்றில் 3 போட்டிகளில் களமிறங்கியுள்ள இந்தியா அந்த 3 போட்டியிலும் தோற்றுப் போனது.

Dhoni

2. அதிலும் குறிப்பாக 2000ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி நாக் அவுட் டிராபியின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோற்ற இந்தியா 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தோற்றதை எந்த ரசிகர்களும் மறக்க முடியாது. குறிப்பாக தோனியின் ரசிகர்கள் அதை நினைத்தால் இப்போதும் கண் கலங்குவார்கள்.

- Advertisement -

3. அது போக கடந்த 2021இல் அதே இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. அப்படி இந்தியாவுக்கு எதிராக களமிறங்கிய 3 ஐசிசி நாக் அவுட் போட்டிகளிலும் வென்றுள்ள அதே நியூஸிலாந்து வரலாற்றில் இதர அணிகளுக்கு எதிராக களமிறங்கிய 18 நாக் அவுட் போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது.

Kohli-1

4. அதுமட்டுமில்லாமல் 2007, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பைகளிலும் நியூசிலாந்திடம் லீக் சுற்றிலேயே இந்தியா தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் நியூசிலாந்து வெளியேறியது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியான செய்தியாகும்.

5. ஏனெனில் ஏற்கனவே பைனலுக்கு முன்னேறியுள்ள பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த வருடம் துபாயில் முதல் முறையாக தோற்றதை தவிர்த்து சமீபத்தில் மெல்போர்ன் மைதானத்தில் விராட் கோலியின் அபாரமான ஆட்டத்தால் பதிவு செய்த வெற்றி உட்பட ஏனைய அத்தனை உலகக்கோப்பை போட்டிகளிலும் இந்தியா வென்றதை உலகமே அறியும்.

Misbah

6. எனவே பாகிஸ்தான் வெற்றியால் மகிழ்ச்சியடைந்துள்ள இந்திய ரசிகர்கள் அறையிறுதியில் இங்கிலாந்தை தோற்கடித்து மீண்டும் பரம எதிரியை பைனலில் சந்திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

Advertisement